5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரிட்டன் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் அடுத்த தேர்தல்.. ஜூலை 4ல் வாக்குப்பதிவு!

பிரிட்டனை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளுப்போவதை யார் என்பதை தீர்மானிக்கும் பொதுத்தேர்வில் ஜூலை 4ஆம் தேதி  நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி நேற்று அறிவித்தார். 44 வயதான ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ள போகின்ற தேர்தல் இதுவாகும். பொதுத் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளிலும், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் அடுத்த தேர்தல்.. ஜூலை 4ல் வாக்குப்பதிவு!
ரிஷி சுனக்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 May 2024 09:44 AM

ஜூலை 4இல் பிரிட்டன் பொதுத் தேர்தல்: பிரிட்டனை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளுப்போவதை யார் என்பதை தீர்மானிக்கும் பொதுத்தேர்வில் ஜூலை 4ஆம் தேதி  நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி நேற்று அறிவித்தார். இது தொடர்பாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரிட்டன் தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தருணம் இது. பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் கோரிக்கையை மன்னர் ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து, ஜூலை 4ஆம் தேதி பிரிட்டன் பொதுத்தேர்தல் நடைபெறும்” என்றார். 44 வயதான ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ள போகின்ற தேர்தல் இதுவாகும்.

பிரிட்டன் தேர்தல் கள நிலவரம்:

பிரிட்டனில் கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த வாக்கெடுப்புக்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களை பெற்று ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்தாலும் பல சர்ச்சையை எதிர்கொண்டது கன்சர்வேட்டிவ் கட்சி. அதாவது, மூன்று பிரதமர்களை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டது. பாலியல் வழக்கில் சிக்கியவரை நியமித்தது. கொரோனா விதிகளை மீறியதாக கூறி போரிஸ் ஜான்சனுக்கு எதிராக புகார் எழுந்த நிலையில், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து லிஸ் டிரஸ் பொருளாதார நெருக்கடியால் பதவியேற்ற 6 மாதங்களில் ராஜினாமா செய்தார். இப்படியான இக்கட்டான சூழலில் தான் கடந்த 2022ல் ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்தார்.

Also Read: இஸ்ரேலை பரம எதிரியாக கருதிய ரைசி.. ஈரானின் அடுத்த அதிபர் யார்?

கன்சர்வேட்டிங் vs தொழிலாளர் கட்சி:

பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையான ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் 650 உறுப்பினர்களை கொண்டது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பிரிட்டனில் ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தில் உள்ளனர். இது அங்கு நடந்த உள்ளூர் தேர்தலில் எதிரொலித்தது. உள்ளூர் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அங்கு நடந்த கவுன்சிலர் தேர்தலில் எப்போது கன்சர்வேட்டிவ் கட்சியை ஆட்சியை பிடித்த வந்த நிலையில், இந்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்து, தொழிலாளர் கட்சி அங்கு வெற்றி பெற்றது.

உள்ளூர் தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்று பல ஆண்டுகள் ஆன நிலையில், இந்த முறை வென்றிருக்கிறது.  கருத்து கணிப்புகளும்  இதேபோன்றே வெளியாகின. இத்துடன் பொதுத் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளிலும், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் உண்மையாகும் பட்சத்தில், கடந்த 27 ஆண்டுகளில் சந்திக்காத மோசமான தோல்வியை கன்சர்வேட்டிவ் கட்சி சந்திக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்.. 200 பயணிகளின் நிலை என்ன? திக் திக்!

Latest News