Ukraine Russia War: ஸ்கூட்டரில் பதுக்கப்பட்ட வெடிக்குண்டு வெடிப்பு.. ரஷ்ய ஜெனரல் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
Russia Bomb Blast: லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரிலோவ் இன்று (டிசம்பர் 17) காலை தான் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறியபோது, ஸ்கூட்டர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு பொறுப்பில் இருந்த ரஷ்ய ஜெனரல் இகோர் கிரிலோவ் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த வெடிக்குண்டு வெடிப்பு சம்பவம் மாஸ்கோவில் அரங்கேறியுள்ளது. லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரிலோவ் இன்று (டிசம்பர் 17) காலை தான் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறியபோது, ஸ்கூட்டர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த எதிர்பாராத விபத்தில் ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு பொறுப்பில் இருந்த லெப்டினண்ட் ஜெனரல் உயிரிழந்தார்.
ALSO READ: தாக்கலானது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. அடுத்து என்ன? எப்போது நடைமுறைக்கு வரும்?
வெடிகுண்டு தாக்குதல்:
ரஷ்ய ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி, வெடிகுண்டு தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்டதாகவும், அந்த வெடித்த ஸ்கூட்டரில் சுமார் 300 கிராம் வெடிபொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ரஷ்யாவின் கிரெம்ளினில் இருந்து தென்கிழக்கே 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரியாசான்ஸ்கி ப்றோஸ்பெக்டிக்கில்
உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே நிகழ்ந்ததாகவும், இதில் ஜெனரல் இகோர் கிரிலோவ் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
Lieutenant General Igor Kirillov, the Commander of the Russian Armed Force’s Radiological, Chemical and Biological Defence Unit has been Killed in a targeted Bombing at the Entrance to an Apartment Building in the Ryazansky District of Moscow. pic.twitter.com/F5SFu9bXiq
— Baba Banaras™ (@RealBababanaras) December 17, 2024
கொலைக்கான காரணம்..?
முன்னதாக, நேற்று (டிசம்பர் 16) உக்ரைனில் தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரிலோவ் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுத படைகளின் கதிர்வீச்சு, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் இகோர் கிரிலோவ் கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.
ALSO READ: 400 ஆண்டுகள் பழமை.. 46 ஆண்டுகளாக பூஜை இல்லை.. முருகர், பார்வதி, சிவன் சிலை மீட்பு!
ஜெனரல் இகோர் கிரிலோவ் தங்கள் நாட்டின் மீது தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. எனவே, ஜெனரல் இகோர் கிரிலோவ் மரணத்திற்கு உக்ரைன் மிக முக்கிய காரணமாக இருக்கலாம் என ரஷ்யா சந்தேகிக்கிறது. எது எப்படியோ, லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவின் மரணம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது. அணு சக்தி பிரிவிலும், ரஷ்ய ராணுவத்திலும் இகோர் கிரிலோவ் பங்கு முக்கியமானது.