நோ டேட்டிங், நோ உடலுறவு.. போராட்டத்தில் குதித்த அமெரிக்க பெண்கள்.. காரணம் என்ன?
Donald Trump: ஆண்கள் அதிகளவில் டிரம்பிற்கு வாக்களித்ததால் தான் அவர் வெற்றி பெற்றுள்ளதாக கூறி அவர்களுக்கு எதிராக பெண்ணியவாதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டேட் செய்ய மாட்டோம், பாலியல் உறவில் ஈடுபட மாட்டோம், திருமணம் செய்ய மாட்டோம், குழந்தைகளை பெற்று கொள்ள மாட்டோம் என கூறி போராட்டம் செய்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் ஆண்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் அண்மையில் அதிபர் தேர்தல் நடந்தது. அமெரிக்காவில் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் வாக்காளர்களிடையே கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவு இருந்ததாக கூறப்பட்டது. இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல டிரம்புக்கு ஆதரவு அதிகரித்தன. அதையடுத்து, தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவும் என கூறப்பட்டது.
போராட்டத்தில் குதித்த அமெரிக்க பெண்கள்
ஆனால், 2995 வாக்குகளுடன் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அதிபர் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த வெற்றியில் டிரம்பின் பிரச்சார உத்தி முக்கியப் பங்காற்றியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், 226 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை தழுவினார் கமலா ஹாரிஸ்.
கடந்த 2020 ஆம் ஆண்டு போட்டியில் டிரம்ப் தோல்வியை தழுவிய நிலையில், இந்த வெற்றி ஒரு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது நபர் இவர் என்பதால் டிரம்ப் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதே நேரத்தில், பெண்கள் பலர் டிரம்ப் வெற்றிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆண்கள் அதிகளவில் டிரம்பிற்கு வாக்களித்ததால் தான் அவர் வெற்றி பெற்றுள்ளதாக கூறி அவர்களுக்கு எதிராக பெண்ணியவாதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Also Read : பாகிஸ்தான் -குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு.. 20 பேர் உயிரிழந்த சோகம்..
4B இயக்கத்தை கையில் எடுத்த பெண்கள்:
மேலும், சமூக வலைதளங்களில் ஆண்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதாவது, 4B Movement-யில் ஈடுபட வலியுறுத்தி சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.
4B Movement என்பது டேட் செய்ய மாட்டோம், பாலியல் உறவில் ஈடுபட மாட்டோம், திருமணம் செய்ய மாட்டோம், குழந்தைகளை பெற்று கொள்ள மாட்டோம் என கூறி போராட்டம் செய்து வருகின்றனர்.
ஆணாதிக்கத்திற்கு எதிரான தீவிர பெண்ணிய இயக்கம் 4B Movement. இது 2019ஆம் ஆண்டு தென் கொரியாவில் உருவானது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இது தொடங்கியது.
Also Read : வரலாற்றில் முதல் முறையாக.. பெண் “White House Chief of Staff” தேர்ந்தெடுத்த டிரம்ப்.. யார் இந்த சூசி வைல்ஸ்!
நோ டேட்டிங், நோ உடலுறவு
அங்கு ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடினர். மேலும், ஆண்களுடன் உடலுறவு கொள்ளவும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அதே பாணியை அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணியவாகிகள் கையில் எடுத்துள்ளனர்.
அடுத்த 4 ஆண்டுகளுக்கு டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுக்கு எதிரான போராட்டம் நடத்துவோம் என்று கூறுகின்றனர். 4B இயக்கம் என்பது நான்கு கொரியா வார்த்தைகளை குறிக்கிறது.
அதன்படி, டிரம்பிற்கு வாக்களித்த ஆண் நண்பர்களை (No Boyfriend) வாக்களிக்க மாட்டோம், டிரம்பிற்கு வாக்களித்தவர்களிடம் இருந்து குழந்தைள் (No Babies) பெற்றுக் கொள்ள மாட்டோம், டிரம்பிற்கு வாக்களித்தவர்களுடன் உடலுறவு (No Heterosexual) வைக்க மாட்டோம், டிரம்பிற்கு வாக்களித்தவர்களை திருமணம் (No Heterosexual Marriage) செய்து கொள்ள மாட்டோம் என்று கூறி அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்று அமெரிக்க பெண்கள் எதிர்பார்த்திருந்தனர். மேலும், அவருக்கே பெண்கள் பலரும் ஆதரவு அளித்தனர். ஆனால், டிரம்ப் வெற்றி பெற்றது அவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும், தேர்தலுக்கு பிறகு கமலா ஹாரிஸ் உரையாற்றிய போது பல பெண்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. ஏனென்றால் டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்படும் என்ற அச்சம் இருக்கிறது. இதனால் டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுக்கு எதிராக அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.