5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மூன்றாவது முறையாக அதிபராகும் டிரம்ப்? தலைகீழாக மாறும் அமெரிக்க அரசியல்!

வரும் 2028ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து டொனால்டு டிரம்ப் சூசமாக பேசியுள்ளார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடுவது குறித்து பேசியது அமெரிக்க அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

மூன்றாவது முறையாக அதிபராகும் டிரம்ப்? தலைகீழாக மாறும் அமெரிக்க அரசியல்!
டிரம்ப் (picture credit : PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 Nov 2024 16:11 PM

வரும் 2028ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து டொனால்டு டிரம்ப் சூசமாக பேசியுள்ளார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடுவது குறித்து பேசியது அமெரிக்க அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற விதி இருக்கும் நிலையில், டிரம்ப் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

மூன்றாவது முறையாக அதிபராகும் டிரம்ப்?

கடந்த 5ஆம் தேதி 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. அதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர்.

முந்தைய கருத்துக் கணிப்புகளில் வாக்காளர்களிடையே கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவு இருந்ததாக கூறப்பட்டது. இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல டிரம்புக்கு ஆதரவு அதிகரித்தன. அதையடுத்து, தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவும் என கூறப்பட்டது.

ஆனால், 2995 வாக்குகளுடன் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அதிபர் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த வெற்றியில் டிரம்பின் பிரச்சார உத்தி முக்கியப் பங்காற்றியதாக கூறப்படுகிறது. டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார்.

Also Read : வெள்ளை மாளிகையில் ஜோ பைடனை சந்தித்த ட்ரம்ப் – நடந்தது என்ன?

அமெரிக்க அரசியலமைப்பு கூறுவது என்ன?

இதற்கான அமைச்சரவை ஏற்பாடுகளை டிரம்ப் மும்முரமாக செய்து வருகிறார். மேலும், தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளுக்கு ஆட்களையும் தேர்வு செய்து வருகிறார். இப்படியான சூழலில், மூன்றாவது முறையாக டிரம்ப் போட்டியிடுவது குறித்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் சூசகமாக பேசியுள்ளார்.

பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சக குடியரசுக் கட்சியினரிடம் அவர் ஆற்றிய உரையின் போது, “அவர் (டிரம்ப்) நல்லவர். நாம் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் (ஆதரவாளர்கள்) கூறும் வரை நான் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது சந்தேகம் தான்” என்றார். டிரம்ப் பேசியது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பின் 22வது சட்டத் திருத்தத்தின்படி, ஒருவர் இரண்டு முறை அதிபராக முடியும். 1951ஆம் ஆண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது 22வது சட்டத் திருத்தம் ஆகும். இந்த 22வது சட்டத் திருத்தத்தை தளர்த்தி 3வது முறை அமெரிக்க அதிபராக வேண்டும் என டிரம்ப் விரும்புவதாக கூறப்படுகிறது.

22வது சட்டத்திருத்தம் செய்ய முடியுமா?

இது அமெரிக்க அரசியல் அரங்கில் புதிய புயலை கிளப்பியுள்ளது. ஆனால், டிரம்பின் விருப்பம் நிறைவேறுவதற்கான சாத்தியம் பிரகாசமாக இல்லை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, டிரம்ப் மூன்றாவது முறையாக அதிபராக விரும்பினால் அவர் முதலில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

Also Read : எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு பதவி.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய டிரம்ப்!

ஆனால், சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது அவ்வளவு சுலபமானது இல்லை.  அதாவது, 22வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றால் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை.

435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் 290 பேரின் ஆதரவு தேவைப்படும். அதேபோல, 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 67 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். இப்போதைய நாடாளுமன்றம் அதற்கு அனுசரணையாக இல்லை.

மேலும், மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 75 சதவீதம் மாநிலங்களாவது அதாவது, குறைந்தபட்சம் 38 மாநிலங்களாவது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த கடினமான நடைமுறை காரணமாக டொனால்டு டிரம்பின் விருப்பம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இல்லை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Latest News