Iran Attack Israel: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா.. அதிபர் ஜோ பைடன் போட்ட உத்தரவு!

சற்றும் எதிர்பாராத விதமாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து நேற்று இரவு ஈரான் அரசு ஒரே நேரத்தில் 150 க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதல் இஸ்ரேல் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கும் சைரன்கள் ஒலித்துக் கொண்டிருப்பதால் பொது மக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

Iran Attack Israel: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா.. அதிபர் ஜோ பைடன் போட்ட உத்தரவு!

ஈரான் தாக்குதல் - அதிபர் ஜோ பைடன் (Image: Twitter)

Updated On: 

02 Oct 2024 06:37 AM

ஈரான் தாக்குதல்: இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேலுக்கு உதவுமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைரன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் ஹமாஸ் அமைப்பினர் வைத்திருந்த நிலையில், இஸ்ரேலுக்கும் அந்த அமைப்பினருக்கும் இடையே கிட்டத்தட்ட கடந்த ஓராண்டாக போர் நடந்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தப் போரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி ஆயுத குழுவினரும் இஸ்ரேல் நாட்டின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு அமைப்புகளுக்கும் ஈரான் அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது.

Also Read:Iran Attack Israel: ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்.. ஈரானால் நிலைகுலைந்த இஸ்ரேல்!

இப்படியான நிலையில் இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் அது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரானில் இருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் ராணுவத்தினர் கொலை செய்தனர். இதனை சற்றும் எதிர்பாராத ஈரான் தங்கள் மண்ணின் நிகழ்த்தப்பட்ட இந்த கொலைக்கு பழி தீர்ப்போம் என சூளுரைத்தது. ஆனால் இதுவரை இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தாமல் இருந்து வந்தது.

இப்படியான நிலையில் கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி ழி தாக்குதலில் ஹிஸ்தான்புல் அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்படவே இஸ்ரேலை கண்டிப்பாக பழிவாங்கும் என ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது.

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து நேற்று இரவு ஈரான் அரசு ஒரே நேரத்தில் 150 க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதல் இஸ்ரேல் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கும் சைரன்கள் ஒலித்துக் கொண்டிருப்பதால் பொது மக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

முன்னதாக மக்கள் அனைவருக்கும் செல்போன் மூலமும் தொலைக்காட்சி வாயிலாகவும் இஸ்ரேல் அரசு பதிந்து புலிகளில் சென்று பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் தான் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் ஏவும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: Mark Zuckerberg : 200 மில்லியன் டாலர் சொத்து.. உலகின் 4வது பணக்காரராக உருவெடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்!

இதனிடையே இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்க உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், “இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. இதனை ஆஸ்திரேலியா வன்மையாக கண்டிக்கிறது. இஸ்ரேலில் வாழும் ஆஸ்திரேலியா மக்கள் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரேலில் உள்ள இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இந்தியாவைச் சேர்ந்த மக்கல் உள்ளூர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், தேவையற்ற பயணங்கள், வெளியில் சுற்றுதல் போன்றவற்றை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது. இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதால் அனைத்து மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் தூதரகத்தின் உதவி என்னை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய தூதரகத்தில் இந்தியாவைச் சேர்ந்த மக்கள் யாரும் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால் உடனடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?