5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

US Presidential Election 2024: இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. இந்திய நேரப்படி எப்போது தெரியுமா?

வல்லரசு நாடான அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்நாட்டின் அதிபராக ஜோ பைடன் இருக்கும் நிலையில் அவரின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அமெரிக்காவில் அடுத்த அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடப்பாண்டு ஜனவரி மாதத்திலேயே தொடங்கி விட்டது. அமெரிக்காவின் சட்டப்படி நவம்பர் மாதம் பிறந்து வரும் முதல் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

US Presidential Election 2024: இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. இந்திய நேரப்படி எப்போது தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 05 Nov 2024 09:53 AM

அமெரிக்க அதிபர் தேர்தல்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அமெரிக்காவில அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. உலகம் முழுவதும் அமெரிக்காவின் அடுத்த அதிபராக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்நாட்டின் அதிபராக ஜோ பைடன் இருக்கும் நிலையில் அவரின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அமெரிக்காவில் அடுத்த அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடப்பாண்டு ஜனவரி மாதத்திலேயே தொடங்கி விட்டது. அமெரிக்காவின் சட்டப்படி நவம்பர் மாதம் பிறந்து வரும் முதல் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

Also Read: US President Election: இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. எப்படி வாக்குப்பதிவு நடக்கும் தெரியுமா?

அந்த வகையில் நவம்பர் 5ஆம் தேதியான இன்று அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு நாளை (நவம்பர் 6) அதிகாலை 5.30  மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்த உடனேயே அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.

Also Read: CM Stalin: இன்று முதல் மாவட்ட வாரியாக ஆய்வு.. களத்தில் இறங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதேசமயம் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஆன ஜோ பைடன் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் தேர்தல் பரப்புரையும் போது சொதப்பியதால் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக  போட்டியிடுகிறார். கருத்துக்கணிப்புகள் முடிவில் டொனால்ட் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று நடைபெறவுள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். அவருக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், இந்திய மக்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி குலசேகரபுரம் என்கிற கிராமத்தைப் பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டி மதுரை S.S.காலனி பகுதியில் உள்ள அனுஷனத்தின் அனுகிரகத்தின் சார்பில் சிறப்பு புஷ்பாஞ்சலி பிரார்த்தனை நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தேர்தல் நடைமுறை

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு அதிபராகவும், துணை அதிபராகவும் தேர்வு செய்யப்படுபவர்கள் நேரடியாக மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். அங்கு எலக்ட்ரோல் காலேஜ் எனப்படும் வாக்குப்பதிவு முறை பின்பற்றப்படுகிறது. அமெரிக்காவில் 50 மாகாணங்கள் இருக்கும் நிலையில் அங்குள்ள மக்கள் தொகை எண்ணிக்கையை பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகள் வாக்களிக்கும் முறை இருக்கும். மொத்தம் 538 வாக்குகள் உள்ள நிலையில் இதில் 270 வாக்குகள் பெரும் வேட்பாளர் அமெரிக்கவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

மக்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் அதிபர் தேர்தலுக்கு வாக்களிக்க உள்ள கட்சிகளின் பிரதிநிதிகளை தான் தேர்வு செய்கிறார்கள். அதன்படி எந்த வேட்பாளர் அதிகமான எண்ணிக்கையில் வாக்குகளை பெறுகிறாரோ அவருக்கு சம்பந்தப்பட்ட மாகாணத்தின் அனைத்து எலெக்ட்ரோல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். ஆனால் இது சில நேரங்களில் சிக்கலை உண்டு பண்ணுவது உண்டு. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டால்ட் டிரம்ப் இருவரும் போட்டியிட்டனர். இதில் ட்ரம்பை விட கிளரி கிளின்டண் 30 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

ஆனால் எலக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் குறைவாக பெற்றதால் அவர் தோல்வியை தழுவினார். ஆக அமெரிக்க அதிபராக தேர்வு செய்ய ஒவ்வொரு மாகாணத்தின் ஒவ்வொரு மக்களின் வாக்குகளும் முக்கியம். அது மட்டுமல்லாமல் அங்குள்ள பென்சில்வேனியா, நார்த் கரோலினா, மிர்ச்சிகன், ஜார்ஜியா, அரிசோனா, விஸ்கான்சின், நெவேடா ஆகிய ஏழு மாகாணங்கள் அணிமாறும் மாகாணங்கள் என அழைக்கப்படுகிறது. இந்த மாகாணங்களில் முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அதாவது ஒவ்வொரு முறையும் அதிபர் தேர்தல் நடைபெறும் போது இந்த ஏழு மாகாணங்களில் உள்ள மக்கள் ஒரு முறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News