Kamala Harris: அமெரிக்க அதிபராவாரா மன்னார்குடி பெண்? கமலா ஹாரிஸ் – தமிழ்நாடு தொடர்பு இதுதான்! - Tamil News | us presidential election 2024 democratic nomination who is kamala harris | TV9 Tamil

Kamala Harris: அமெரிக்க அதிபராவாரா மன்னார்குடி பெண்? கமலா ஹாரிஸ் – தமிழ்நாடு தொடர்பு இதுதான்!

US Presidential Election 2024: உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் குடியரசுத் தலைவர் 97 வயதான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம் ஜனநாயக கட்சி சார்பில் 81 வயதாகும் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரையும் முன்மொழிந்தார்.

Kamala Harris: அமெரிக்க அதிபராவாரா மன்னார்குடி பெண்? கமலா ஹாரிஸ் - தமிழ்நாடு தொடர்பு இதுதான்!

கமலா ஹாரிஸ்

Updated On: 

25 Jul 2024 12:35 PM

கமலா ஹாரிஸுக்கு பெரும் ஆதரவு: உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் குடியரசுத் தலைவர் 97 வயதான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம் ஜனநாயக கட்சி சார்பில் 81 வயதாகும் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக தேர்வான போதிலும், உடல் நிலை மற்றும் வயது மூப்பு காரணமாக அவர் போட்டியிடக் கூடாது என எதிர்ப்பு இருந்தது. அவரது கட்சியினரை பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என குரல்கள் வலுக்கத் தொடங்கின. இந்த நிலையில், அவர் கடந்த 21ஆம் தேதி தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரையும் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து ஜனநாயக கட்சியின் பல்வேறு தலைவர்களும் கமலா ஹாரிஸை ஆதரித்தனர்.

Also Read: ஒலிம்பிக் நடக்கும் பாரிஸில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

இது தவிர அதிபர் வேட்பாளர் போட்டியில் கமலா ஹாரிஸுக்கு எதிராக ஒருவர் கூட இல்லை என்ற நிலை உள்ளது. எனவே, வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் டிரம்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், இவர் யார்? இவருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு என்பதை பார்ப்போம்.

யார் இந்த கமலா ஹாரிஸ்:

2021ஆம் ஆண்டு ஜோ பைடன் பதவியேற்றதில் இருந்து அமெரிக்க துணை அதிபராகத் தன் செயல்பாடுகளால் பெரிதும் கவனம் பெற்றார் கமலா ஹாரிஸ். இவர் கலிஃபோர்னியாவில் பிறந்தார். இவரது தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். இவரது தாய் ஷியாம கோபலன் தமிழகத்தைச் சேர்ந்தவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரத்தை பூர்வீமாகக் கொண்டவர். இந்த தம்பதிக்கு மகளாக பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். தடகள வீரரான கமலா ஹாரிஸ் 1990ஆம் ஆண்டில் ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

மிகவும் கண்டிப்பானவர் என்ற பெயரும் மக்கள் மத்தியில் இருக்கிறது. 2010 மற்றும் 2014 என இரண்டு முறை கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனராக பணியாற்றிய முதல் பெண் என்ற பெருமை இவருக்கே சேரும். அதேபோல, தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதுல் அமெரிக்க செனட்டர் என்ற புகழும் இருக்கும் உண்டு. இதன்பின், 2017ல் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய கமலா ஹாரிஸ், அதே ஆண்டில் எம்.பியாக இருந்தார். இதன் மூலம் அமெரிக்கா நாடாளுமன்றத்திற்கு தேர்வான 2வது அமெரிக்கர் மற்றும தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த முதல் பெண் என்ற புகழையும் பெற்றார்.

தமிழ்நாட்டுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

கமலா ஹாரிஸ் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கின்றனர். கமலா ஹாரிஸின் பெற்றோர் விவாகரத்து பெற்றபின், அவரின் தாய் ஹியாமலா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார் கமலா ஹாரிஸ். இந்த நிலையில், கமலாவின் தாயார் இந்தியாவிற்கு செல்லும்போது அவருடன் கமலா ஹாரிஸும் சென்றிருக்கிறார். அப்போது தமிழகத்தில் சில நாட்கள் தங்கியிருந்து சென்றிருக்கிறார். மேலும், அவரது  தாத்தா பாட்டியுடன் சென்னையிலும் இருந்திருக்கிறார்.  இந்திய பாரம்பரியத்துடன் கமலா ஹாரிஸ் வளர்ந்தார்.

இவர் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றபோது ஒட்டுமொத்த இந்தியாவுமே பெருமை கொண்டது. குறிப்பாக இவரது தாயார் பிறந்த ஊரான திருவாரூர் பகுதியில் உள்ள கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது. பல சமயங்களில் இந்தியா உடனான தனது உறவை கமலா ஹாரிஸ் பெருமையாக வெளிப்படுத்தி உள்ளார். இதற்கிடையில், கமலா ஹாரிஸின் தாயாரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராமம் மக்கள் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என வழிபாடு செய்தனர். அவரின் குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயிலில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Also Read: மைண்ட் வைரஸால் மகனை இழந்தேன்.. நொந்துபோன எலான் மஸ்க்.. என்ன ஆச்சு?

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!