US Presidential Election: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. கமலா ஹாரிஸ் உடன் நேருக்கு நேர் விவாதம்.. தேதி குறித்த டிரம்ப்! - Tamil News | us presidential election 2024 donald trump agrees to debate with kamala harris | TV9 Tamil

US Presidential Election: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. கமலா ஹாரிஸ் உடன் நேருக்கு நேர் விவாதம்.. தேதி குறித்த டிரம்ப்!

Updated On: 

04 Aug 2024 09:33 AM

Kamala Harris VS Donald Trump: கமலா ஹாரிஸ் உடன் விவாதம் நடத்த குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். பொதுவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தனியார் தொலைக்காட்சிகள் நடத்தும் நேருக்கு நேர் விவாதங்களில் கலந்து கொள்வார்கள். இந்த விவாதங்கள் பல கட்டங்களாக நடைபெறும் மட்டுமல்லாது அதிபர் தேர்தலில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த விவாதம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

US Presidential Election: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. கமலா ஹாரிஸ் உடன் நேருக்கு  நேர் விவாதம்.. தேதி குறித்த டிரம்ப்!

டிரம்ப் - கமலா ஹாரிஸ்

Follow Us On

கமலா ஹாரிஸ் vs டிரம்ப்: அமெரிக்காவில் அதிபர் தேதில் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுத் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். 81 வயதாகும் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக தேர்வான போதிலும், உடல் நிலை காரணமாக அவரால் போட்டியிட முடியாததால் அவர் தேர்தலில் இருந்து விலகினார். மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரையும் முன்மொழிந்தார். கமலா ஹாரிஸ் போதுமான வாக்குகளை பெற்று ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 19ஆம் தேதி சிகாகோவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.  புதிய அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 4,000 ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளின் வாக்களிக்கும் இந்த உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.

இதில் கமலா ஹாரிஸ் மட்டுமே வேட்பாளராக இருந்த நிலையில், அவர் அதிபர் வேட்பாளாராக தேவையான வாக்குகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதிபர் வேட்பாளராக களமிறங்கும் முதல் கறுப்பின பெண் என வரலாற்று சாதனை படைத்தள்ளார் கமலா ஹாரிஸ்.

Also Read: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஜோ பைடன்.. உருக்கமான அறிக்கை!

அனல் பறக்கும் விவாதம்:

அடுத்தகட்ட நகர்வாக கமலா ஹாரிஸ் உடன் விவாதம் நடத்த குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். பொதுவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தனியார் தொலைக்காட்சிகள் நடத்தும் நேருக்கு நேர் விவாதங்களில் கலந்து கொள்வார்கள். தங்கள் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் நடைபெறும் இந்த விவாதங்கள் அனல் பறக்கம். இந்த விவாதங்கள் பல கட்டங்களாக நடைபெறும் மட்டுமல்லாது அதிபர் தேர்தலில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த விவாதம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Also Read: அமோக ஆதரவு.. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வானார் கமலா ஹாரிஸ்!

அதன்படி, ஃபாக்ஸ் சேனல் நடத்த உள்ள விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் உடன் டிரம்ப் விவாதம் நடத்த உள்ளார். செப்டம்பர் 4ஆம் தேதி இந்த விவாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து டிரம்ப் தனது எகஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “ஜோ பைடன் உடன் நடத்திய விவாதத்தில் இருந்த அதே விதிகள் தான். ஆனால் இந்த முறை அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் இருக்கும்” என்றார்.

 

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version