US Presidential Election: கமலா ஹாரிஸ் vs ட்ரம்ப்.. அமெரிக்காவை ஆளப்போவது யார்?
இந்திய நேரப்படி மாலை 5.30 தொடங்கி நாளை நவம்பர் 6 அதிகாலை 5:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆன டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக பதவி வகித்து வரும் கமலா ஹாரிஸ் களம் கண்டுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல்: உலக மக்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 தொடங்கி நாளை நவம்பர் 6 அதிகாலை 5:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆன டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக பதவி வகித்து வரும் கமலா ஹாரிஸ் களம் கண்டுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பதை இன்னும் ஒரு நாளில் தெரிந்துவிடும்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்படும் நபர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் பதிவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் உலக அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. அமெரிக்காவில் நவம்பர் மூன்றாம் தேதி வெளியிடப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அடிப்படையில் பார்த்தேம் என்றால் கமலா ஹாரிஸ் தான் டொனால்ட் ட்ர்ம்பை விட முன்னிலை வகிக்கிறார்.
ஹாரிஸ்எக்ஸ்/ஃபோர்ப்ஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி கடந்த அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் தேதிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸூக்கு 49% பேரும், ட்ரம்புக்கு 48% வரையும் வாக்காளர்கள் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் அனைத்து பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 16% பேர் மற்றும் வாய்ப்பு பெறும் வாக்காளர்களில் 10% பேரும் தங்கள் மனதை மாற்றக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.