5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

US President Election: இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. எப்படி வாக்குப்பதிவு நடக்கும் தெரியுமா?

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸூம் களம் காண்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே சொற்ப வித்தியாசத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த இருவரில் யார் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளூர் முதல் உலகம் வரை எழுந்துள்ளது.

US President Election: இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. எப்படி வாக்குப்பதிவு நடக்கும் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 05 Nov 2024 06:00 AM

அதிபர் தேர்தல்: உலகமே ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) நடைபெற உள்ளது.இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸூம் களம் காண்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே சொற்ப வித்தியாசத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த இருவரில் யார் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளூர் முதல் உலகம் வரை எழுந்துள்ளது. கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை கமலா ஹாரிஸூக்கு ஆதரவாகவே வெளியான நிலையில் வாக்கு சதவீதம் வித்தியாசம் இருவருக்குமிடையே சிறிதளவு உள்ளதே எதிர்பார்ப்பு எகிற காரணமாக அமைந்துள்ளது.

Also Read: இன்ஸ்டாகிராம் சிக்கலை கண்டுபிடித்த கோவை மாணவர்.. மெட்டா நிறுவனம் கொடுத்த வெகுமதி!

அணி மாறும் மாகாணங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலை பொருத்தவரை 7 மாகாணங்களில் முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படும். அமெரிக்காவைப் பொறுத்தவரை 50 மாகாணங்கள் உள்ளது. இதில் விஸ்கான்சின், பென்சில்வேனியா, நார்த் கரோலினா, அரிசோனா, ஜார்ஜியா, மிர்ச்சிகன், நெவேடா ஆகிய 7 மாகாணங்கள் அணி மாறும் மாகாணங்கள் என அழைக்கப்படுகிறது. அதாவது அதிபர் தேர்தல் நடைபெறும் போது ஒரு முறை குடியரசு கட்சிக்கும், மற்றொரு முறை ஜனநாயக கட்சிக்கும் இந்த ஏழு மாகாணங்களில் மக்கள் ஆதரவாக வாக்களிப்பது வழக்கம்.

கருத்துக்கணிப்பு முடிவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக கமலா ஹாரிஸ் தரப்பில் ரூ.6,640 கோடியும், டொனால்ட் ட்ரம்ப் தரப்பில் ரூ.3000 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அமெரிக்க அதிபர் ஆன ஜோ பைடன் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது சொதப்பியதால் போட்டியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கடந்த ஜூலை இறுதியில் இருந்து வெளியான தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் தொடர்ந்து அதிகமான ஆதரவுடன் முன்னணியில் இருந்து வந்தார். ஆனால் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு அவருக்கான ஆதரவு சற்று குறைய தொடங்கியது. கடந்த அக்டோபரில் கமலா ஹாரிஸுக்கு 44% , குடியரசு கட்சி வேட்பாளர் டொனால் ட்ரம்புக்கு 43% பேர் ஆதரவு தெரிவித்தனர் இருவருக்குமான இடைவெளி ஜூலை மாதத்தில் 3 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் 1% ஆக குறைந்தது.

Also Read: FD Interest Rate : 1 முதல் 5 ஆண்டுகளுக்கான FD திட்டங்கள்.. தனியார் வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!

அதிபர் வேட்பாளர் தேர்வு செய்வது எப்படி?

அமெரிக்காவை பொறுத்தவரை அதிபரும், துணை அதிபரும் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக எலெக்ட்ரோல் காலேஜ் எனப்படும் செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அதாவது அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் மக்கள் தொகையை பொறுத்து குறிப்பிட்ட பிரதிநிதிகள் வாக்களிக்கும் நிலை இருக்கும். மொத்தம் 538 வாக்குகள் உள்ள நிலையில் இதில் 270 வாக்குகள் பெறும் வேட்பாளர் அதிபராக தேர்வு செய்யப்படுவார் . வாக்காளர்கள் மாகாண அளவில் வாக்களிக்கவுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். போட்டியிடும் வேட்பாளர்களை கிடையாது.

அதாவது எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையில் மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ அவருக்கு சம்பந்தப்பட்ட மாகாணத்தின் அனைத்து எலெக்ட்ரோல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன்  டொனால்ட் ட்ரம்பை விட 30 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றார். ஆனால் எலெக்ட்ரோல் காலேஜ் வாக்குகளை குறைவாக பெற்றதால் அவர் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை எலக்ட்ரோல் வாக்குகளை இரண்டு வேட்பாளர்களும் சமமாக பெற்றிருந்தால் பிரதிநிதிகள் மற்றும் செனட் சபை உறுப்பினர்கள் வாக்களித்து அதிபரை தேர்வு செய்வார்கள். அமெரிக்க வரலாற்றில் 1824 ஆம் ஆண்டு நான்கு அதிபர் வேட்பாளர்கள் சம வாய்ப்புகளை பெற்றிருந்தனர். இதனைத்  தொடர்ந்து பிரதிநிதிகள் சபையில் நடந்த வாக்கெடுப்பில் 1824ல் ஜான் குயின்சி ஆடம்ஸ் அதிக ஆதரவு பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News