US Presidential Election: ”இருண்ட காலத்தை நோக்கி நகரும் அமெரிக்கா” தேர்தல் தோல்விக்கு பின் கமலா ஹாரிஸ் எச்சரிக்கை! - Tamil News | US Presidential election we are entering a dark time says kamala harris | TV9 Tamil

US Presidential Election: ”இருண்ட காலத்தை நோக்கி நகரும் அமெரிக்கா” தேர்தல் தோல்விக்கு பின் கமலா ஹாரிஸ் எச்சரிக்கை!

Kamala Harris : உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பிட்ட போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். அதே நேரத்தில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் படுதோல்வியை சந்தித்தார்.

US Presidential Election: ”இருண்ட காலத்தை நோக்கி நகரும் அமெரிக்கா தேர்தல் தோல்விக்கு பின் கமலா ஹாரிஸ் எச்சரிக்கை!

கமலா ஹாரிஸ் (picture credit: PTI)

Updated On: 

07 Nov 2024 06:57 AM

உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பிட்ட போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்க தொடங்கியதில் இருந்தே டிரம்ப் முன்னிலை பெற்று வந்தார். குறிப்பாக, பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன், நெவாடா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி உறுதியான உடனேயே, அவர் அதிபராகுவது கிட்டதட்ட உறுதியானது. இதன்படி, தற்போது 295 எலக்டோரால் வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை டிரம்ப் பதிவு செய்துள்ளார். அதே நேரத்தில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 226 எலக்டோரால் வாக்குகளை பெற்று படுதோல்வியை சந்தித்தார்.

”இருண்ட காலத்தை நோக்கி நகரும் அமெரிக்கா”

தேர்தல் தோல்விக்கு பின் கமலா ஹாரிஸ் ஹாரிஸ் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து பொதுமக்களிடம் உரையாற்றினார். அவர் பேசுவதற்கு முன்பே, பல மணி நேரத்திற்கு முன்பே ஏராளமான மக்கள் அங்கு வந்து சேர்ந்தனர். கமலா ஹாரிஸின் உரையின் போது பல பெண் ஆதரவாளர்கள் கண்ணீருடன் காணப்பட்டனர்.

அப்போது அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் தனது தேர்தல் தோல்வியை துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஏற்றுக்கொண்டார். இதனுடன் அவர் உணர்ச்சிகரமான மற்றும் உறுதியான உரையை நிகழ்த்தினார்.

தனது தோல்வியை ஏற்றுக்கொண்ட அவர், இந்த தேர்தலில் எனது தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் இந்த போராட்டமும் பிரச்சாரமும் தோல்வியடையவில்லை. மக்களுக்கான போராட்டம் தொடரும் என்றார்.

Also Read : இரண்டாவது முறையாக அதிபராகும் டிரம்ப்.. எப்போது பதவியேற்பு? கடக்க வேண்டிய முக்கிய நிலைகள் என்ன?

”தேர்தலில் தோல்வியடைந்தது வேதனையளிக்கிறது”

மேலும், ”ஜனநாயகத்தின் கொள்கைகளை அங்கீகரிக்கவும் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவும் தனது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு என்பது தேர்தலில் தோல்வியடையும் போது ​​அதன் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவே ஜனநாயகத்திற்கு நல்லது.

தோல்வியடைந்தது வேதனையளிக்கிறது. இருட்டாக இருந்தால் மட்டுமே, நீங்கள் நட்சத்திரங்களைப் பார்க்க முடியும். பலருக்குத் தெரியும், நாம் ஒரு இருண்ட காலத்திற்குள் நுழைகிறோம். அமெரிக்காவின் வாக்குறுதியின் ஒளி எப்போதும் பிரகாசமாக எரியும். இந்த தேர்தல் முடிவுகளை நாம் ஏற்க வேண்டும்.

இன்று அதிபரபாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் உடன் பேசினேன், அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். நாங்கள் அவருக்கும், அவர்களின் மாற்றத்திற்கு உதவுவோம். நாங்கள் அமைதியான அதிகார பரிமாற்றத்தில் ஈடுபடுவோம்”  என்றார்.

டிரம்பிற்கு குவியும் வாழ்த்துகள்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, டொனால்ட் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, வரலாற்று சிறப்பு வெற்றி பெற்றுளீர்கள். உங்களுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.


இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “எனது நண்பர், அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுடன் ஒரு சிறந்த உரையாடலை மேற்கொண்டார். அவரது அற்புதமான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

இந்தியா-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த மீண்டும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன். தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் பல துறைகளை மேம்படுத்த ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்றார்.

Also Read : பட்டையை கிளப்பிய ட்ரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றி!

மேலும் டிரம்ப் பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசுகையில், “உலகம் முழுவதும் பிரதமர் மோடியை நேசிக்கிறது. இந்தியா ஒரு அற்புதமான நாடு. பிரதமர் மோடி அற்புதமான மனிதர். அவரையும் இந்தியாவையும் உண்மையான நண்பராக கருதுகிறேன்” என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? இதை பாலோ பண்ணுங்க..
பாலை காய்ச்சாமல் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
காலிஃபிளவர் சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நன்மைகளை தருமா?
ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் வேகம் அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!