5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அதானிக்கு புது சிக்கல்.. சம்மன் அனுப்பிய அமெரிக்கா.. 21 நாட்கள் கெடு!

Gautam Adani: பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானிக்கு அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகரில் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் அதானிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அதானிக்கு புது சிக்கல்.. சம்மன் அனுப்பிய அமெரிக்கா.. 21 நாட்கள் கெடு!
அதானி (picture credit : PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Nov 2024 13:47 PM

பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானிக்கு அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகரில் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் அதானிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. புகார் தொடர்பாக அடுத்த 21 நாட்களுக்குள் நேரில் பதில் அளிக்க வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகி பதில் அளிக்க தவறினால் புகாரில் கோரப்பட்ட நிவாரணத்திற்காக இருவருக்கும் எதிராக தீர்ப்பு அளிக்க நேரிடும் என அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

அதானிக்கு சம்மன் அனுப்பிய அமெரிக்கா

அகமதாபாத்தைத் தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் அதானி குழுமம் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்தது. வைர வியாபாரியாக வர்த்தகத்தை தொடங்கிய அதானி, அதன் பிறகு நிலக்கரி, எரிவாயு, மின்சாரம், விமான நிலையம், துறைமுகம், தொலைதொடர்பு என பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

குறுகிய கால இடைவெளியில் உலக பணக்காரர்களுக்கே சவால் விடும் அளவுக்கு அவரது வளர்ச்சி அபரிமிதமான அளவில் இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 143.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடித்து பலரையும் வியப்படைய செய்ய வைத்தார்.

அதே நேரத்தில் அதானி குழுமத்தின் பங்குள் சந்தையில் பெரும் லாபத்தை ஏற்படுத்தியது. இதனிடையில் சமீப காலங்களில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்கள் வரத் தொடங்கின. அதாவது, பங்குச்சந்தை முறைகேடு, அரசிடம் இருந்து பல கோடி மதிப்பிலான முக்கிய ஒப்பந்தங்களை சட்ட விதிகளையும் மீறி பெறுவது என இவர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

Also Read : ஷாக் அடிக்கும் தங்கம் விலை.. வெறும் 6 நாட்களில் ரூ.2,920 உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

குறிப்பாக பங்குச்சந்தை முறைகேடு புகார் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக சரிந்ததோடு, அரசியல் ரீதியாக விஸ்வரூபம் எடுத்தது. இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் அதானி குழுமம் மீது தற்போது புதிய குறறசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதானி மீதான லஞ்ச புகார்

கடந்த 2020ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்ததில் சூரிய மின்சக்தி திட்டத்தில் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர் (ரூ.2,100 கோடி) லஞ்சம் கொடுத்ததாக , இந்த லஞ்ச பணத்துக்காக தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்க அரசு குற்றச்சாட்டியுள்ளது.

மேலும், லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் இருந்து 3 பில்லியன் டாலர்கள் நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து பல ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து அதானி நிறுவனம், முறைகேடுகளில் ஈடுபட்டது சட்டப்படி குற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 2022ஆம் ஆண்டு பிப்ரவரி இடையிலான காலக்கட்டத்தில் அதானி நிறுவனம் இந்திய அதிகாரிகளுககு லஞ்சம் கொடுத்து, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக பெற்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Also Read : அரசு ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம் மாதச் சம்பளம்.. எப்போது கிடைக்கும்?

பிடிவாரண்ட் பிறப்பிப்பு

கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி அதானி இந்திய அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசி லஞ்சம் கொடுப்பதற்காக பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   மேலும், இந்தியா அதிகாரிகளை லஞ்சம் தருவதற்காக அதானி தொலைபேசியில் பேசியதற்காக ஆதாரங்களும் அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சவுரவ் அகர்வால் உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.  அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள், ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இருப்பினும் இவர் மீதான குற்றச்சாட்டுகள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும். குறிப்பாக வர்த்தக ரீதியாக பெரும் சரிவை சந்திக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News