”அனுமதியின்றி என்னை பெத்தது தப்பு” பெற்றோர் மீது பெண் வழக்கு.. குழம்பிய நெட்டிசன்கள்!
தன் அனுமதியின்றி தன்னைப் பெற்றெடுத்ததற்காக பெண் ஒருவர் அவரது பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் வினோதம்:
அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்தவர் பெண் தியாஸ். இவர் டிக்டாக் பிரபலமாவார். எப்போதும் சோஷியல் மீடியாக்களில் அக்டிவாக இருப்பவர் தியாஸ். இந்த நிலையில், சோஷியல் மீடியாக்களில் இவரது வீடியோ ஒன்று பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இதனால், நெட்டிசன்கள் பலரும் குழம்பி போய் உள்ளனர். அதாவது, தன் அனுமதியின்றி தன்னைப் பெற்றெடுத்ததற்காக பெண் தியாஸ் அவரது பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து தியாஸ் கூறுகையில், “நான் உண்மையில் பூமியில் இருக்க விரும்புகிறேன். ஆனால், நான் பிறப்பதற்கு என்னை என் பெற்றோர் அனுமதி கேட்கவில்லை. நான் இந்த பூமிக்கு வருவதற்கு முன் என்னிடம் அனுமதி கேட்காமல் பெற்றெடுத்துள்ளனர். எனவே நான் அவர்கள் மீது வழக்கு தொடர்கிறேன்” என்றார்.
பெற்றோர் மீது பெண் வழக்கு:
மேலும், தனது குழந்தைகளின் ஏன் அனுமதி கேட்கவில்லை என்பதையும் விளக்கி உள்ளார். பெண் தியாஸ் கூறுகையில், ”நான் என் குழந்தைகளை தத்தெடுத்தேன். அவர்களது அனுமதியின்றி நான் பெற்றெடுக்க விரும்பவில்லை. நான் அவர்களை பெற்றெடுக்கவில்லை என்பதால், அவர்கள் இங்கே இருப்பது என் தவறில்லை. நீங்களும் இப்பேது குழந்தை பெற்றெடுக்க விரும்பினால், உடனே எதாவது செய்து அனுமதி வாங்க பாருங்கள். இதுபோல என்னுடைய அனுமதியின்றி என்னை பெற்றெடுத்த என் பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். என்னை கருவாக உருவாக்கியது. நான் பிறந்தது பிறகு என்னை வளர்த்தது அவர்கள் தான்.
Also Read : “ஆணுறை அணியாமல் பாலுறவு வைத்தார்” டிரம்ப் குறித்து நடிகை பரபர வாக்குமூலம்!
காரணம் என்ன?
என்னுடைய அனுமதி இல்லாமலேயே இதையெல்லாம் என் பெற்றோர் செய்துள்ளனர். நான் வளர்ந்து நானே வேலை செய்து கொள்ள வேண்டும் என்பதை என்னிடம் அவர்கள் கூறவில்லை” என்றார். இதனை வீடியோவை அந்த பெண் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகுவதோடு நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது, ”இது உண்மையா? உங்களுக்கு உதவி தேவை, நீங்கள் கேலி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன் மற்றும் இப்போது தங்கள் பெற்றோர்கள் மீது பணத்திற்காக வழக்குத் தொடர்ந்து உள்ளீர்கள். அதுவே உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்குறீர்களா?” என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.‘
Also Read : காலநிலை மாற்றத்தின் உச்சம்! வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலி.. ஆப்கானிஸ்தானில் சோகம்!