மீண்டும் ரஷ்யாவை ஆளப்போகும் புதின்… 5வது முறையாக இன்று பதவியேற்பு!
71 வயதாகும் புதின் 5வது முறையாக மீண்டும் ரஷ்ய அதிபராக பதவியேற்க உள்ளார்.
மீண்டும் ரஷ்ய அதிபரானார் புதின்:
உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழ்கிறது. அமெரிக்காவுக்கு நிகராக ஒரு நாடு என்றால் அது ரஷ்யா ஆகும். இங்கு ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, 2012ஆம் ஆண்டில் அதிபராக விளாடிமிர் புதின் பதவியேற்ற பிறகு சட்டத்தை மாற்றினார். ஒரே நபரால் தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபராக இருக்க முடியாது என்ற விதியை மாற்றி, ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்ந்து அதிபராக இருக்கலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.
Also Read : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை.. 3 இந்தியர்களை கைது செய்த கனட போலீசார்
இன்று பதவியேற்பு விழா:
மேலும், அதிபரின் பதவிக் காலம் அப்போது 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது புதின் பிரதமராக இருந்தபோது 6 ஆண்டாக நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், ரஷ்யா அதிபரின் பதவிக்காலம் கடந்த ஆண்டுடன் முடிவடைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலில் 87 சதவீத வாக்குள் பெற்று ஐந்தாவது முறையாக புதின் அதிபராகி உள்ளார். உக்ரைன் போருக்கு பிறகு அங்கு நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கும் நிலையில், புதின் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
இதன் மூலம் 71வயதாகும் புதின் 5வது முறையாக மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். இதனை அடுத்து, தலைநகர் மாஸ்கோவில் இன்று ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் பதவியேற்கிறார்.
Also Read : பெண் எம்.பிக்கே இப்படியா? இரவில் நடந்த கொடூர சம்பவம்.. என்னாச்சு?