சடலங்களை உண்ணும் தெரு நாய்கள்.. காசாவில் தொடர் தாக்குதல்களால் பஞ்சம் ஏற்படும் அபாயம்.. - Tamil News | war-zone-gaza-stray-dogs-eat-dead-bodies-emergency-services-chief-says | TV9 Tamil

சடலங்களை உண்ணும் தெரு நாய்கள்.. காசாவில் தொடர் தாக்குதல்களால் பஞ்சம் ஏற்படும் அபாயம்..

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஏராளமான கருவுற்ற பெண்களும், குழந்தைகளும் சிக்கியுள்ளனர். இஸ்ரேலிய படையினர் ஹமாஸ் உறிப்பினர்கள் இருப்பதாக் கூறி இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இன்று காலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் கடலோர நகரமான லதாகியாவில் தீ பரவியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இருக்கும் ஆண்டி மிஸைல் சிஸ்டம் அந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்களை உண்ணும் தெரு நாய்கள்.. காசாவில் தொடர் தாக்குதல்களால் பஞ்சம் ஏற்படும் அபாயம்..

கோப்பு புகைப்படம்

Published: 

17 Oct 2024 11:43 AM

வடக்கு காசாவின் போரினால் பாதிக்கப்பட்ட தெருக்களில், ஒரு பயங்கரமான காட்சி இணையத்தில் வெளியாகி உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காட்சியில், தூசி நிறைந்த சாலைகளில் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன, இஸ்ரேலிய தாக்குதலால் முழு தெருக்களும் இடிந்து விழுந்தன, மக்கள் ஒரு வேளை உணவு உண்ண முடியாமல் தவிக்கின்றனர், இத்தகைய சூழலில் அங்கு இருக்கும் தெரு நாய்கள் அங்கு இருக்கும் உடல்களை உண்ணும் காட்சி வெளியாகியுள்ளது. வடக்கு காசாவில் அவசரகால சேவைகளின் தலைவரான ஃபாரேஸ் அஃபானா, நிலைமையை ஒரு பயங்கரமான சூழலாக குறிப்பிட்டுள்ளார். இதி தொடர்பாக அவர் கூறுகையில், “ இவ்வாறு தெரு நாய்கள் உடல்கலை சாப்பிடுவதால், இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.


மேலும் ”கடந்த 12 நாட்களில் இஸ்ரேலிய படையினர் மூன்று முறை வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஏராளமான கருவுற்ற பெண்களும், குழந்தைகளும் சிக்கியுள்ளனர். இஸ்ரேலிய படையினர் ஹமாஸ் உறிப்பினர்கள் இருப்பதாக் கூறி இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இன்று காலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் கடலோர நகரமான லதாகியாவில் தீ பரவியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இருக்கும் ஆண்டி மிஸைல் சிஸ்டம் அந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்திக்கொண்டுவரப்பட்ட அரிய வகை வனவிலங்குகள்.. தட்டித்தூக்கிய சுங்கத்துறை அதிகாரிகள்..

இஸ்ரேலின் தாக்குதலில் காசா பகுதியில் 42,409 பேர் கொல்லப்பட்டுள்ளனர், பெரும்பான்மையான பொதுமக்கள், 99,153 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களில் 65 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர் தாக்குதல் காரணமாக காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜபல்யா பகுதியில் இருந்து குறைந்தது 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர், அதே நேரத்தில் வடக்கு காசாவில் மீதமுள்ள 400,000 பேர் பசி மற்றும் இடைவிடாத குண்டுவீச்சுகளை எதிர்கொள்கின்றனர் என்று ஞாயிறன்று ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: தாடை உடைந்தும் பவுலிங்.. சுழல் சூறாவளி.. அனில் கும்ப்ளே செய்த சம்பவங்கள்..!

பொதுமக்கள் பட்டினி கிடப்பதையோ அல்லது வெளியேறுவதையோ தவிர வேறு வழியில்லை என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா அமைப்பின்( UNRWA) தலைவர் பிலிப் லாஸரினி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இஸ்ரேலிய நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து வடக்கு காசாவின் சில பகுதிகளில் குறைந்தது 342 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக்கணக்கான “பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள்” காயமடைந்துள்ளனர். செவ்வாயன்று, வடக்கு காசாவில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் குடிமைத் தற்காப்பு தெரிவித்துள்ளது. சிஎன்என் மற்றும் பிறர் முன்பு கூறியது போல், ஜபல்யாவில் உள்ள அபு ஷார்க் ரவுண்டானாவில் வடக்கில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அல்-ஜுவைடி குற்றம் சாட்டினார்.

 

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...
நடிகை மடோனாவின் நியூ ஆல்பம்..!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா..?