5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Iran – Israel War: ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே என்னதான் பிரச்னை? போர் நடக்க என்ன காரணம்.. முழு விவரம்!

Missile Attack | டெல் அவிவ் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டதால் வான் எங்கும் ஏவுகணை சைரன்கள் ஒலித்துள்ளன.  இந்த பதட்டமான சூழலை கண்டு பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். எனவே பொதுமக்களை குண்டு துளைக்காத முகாமில் சென்று தஞ்சமடையும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

Iran – Israel War: ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே என்னதான் பிரச்னை? போர் நடக்க என்ன காரணம்.. முழு விவரம்!
இஸ்ரேல் மீது தாக்குதல்
vinalin
Vinalin Sweety | Updated On: 02 Oct 2024 12:07 PM

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த பயங்கர தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல், ஹமாச் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில், ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் இதுவரை சுமார் 40,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைப்பு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எண்ணும் சோகமான செய்தியையும் ஹமாஸ் குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிங்க : Mark Zuckerberg : 200 மில்லியன் டாலர் சொத்து.. உலகின் 4வது பணக்காரராக உருவெடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்!

மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் ஈரான்

இந்த நிலையில்தான், பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. அப்போது இஸ்ரேல் படைகள் ஹிஸ்புல்லா மீது கடும் தாக்குதலை நடத்தியது. அப்போது லெபனான் எல்லைக்கு அருகில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தொடர்ந்து ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இவ்வாறு இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான், இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Photo : சக்கர நாற்காலி வழங்காத விமான நிர்வாகம்.. கழிவறைக்கு தவழ்ந்து சென்ற செய்தியாளர்.. வைரல் புகைப்படம்!

குண்டுவீசி கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர்

கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ருல்லாவை விமானப்படை மூலம் குண்டு வீசி இஸ்ரேல் ராணுவ படையினர் கொன்றனர். இதனிடையே போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவுரை வழங்கிய நிலையில் , தெற்கு லெபனான் இஸ்ரேல் ராணுவத்தினரை குவித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் மீது தாக்குதலையும் நடத்தி வருகிறது. இந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருவதால் இஸ்ரேல் – ஈரான் இடையே பயங்கரமான மோதல் போக்கு நீடித்து வந்தது.

இதையும் படிங்க : Donald Trump : பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்ட டொனால்ட் டிரம்பின் ராட்சத நிர்வாண சிலை.. பொதுமக்கள் கடும் விமர்சனம்!

அமெரிககவின் எச்சரிக்கையை கண்டுக்கொள்ளாத ஈரான்

இந்த நிலையில் தான் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இதனால் ஈரான் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத ஈரான், எதிர்பார்த்தபடியே காஸா மற்றும் லெபனான் மீது  தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையும் படிங்க : Nepal Floods: நேபாளத்தை புரட்டி போட்ட கனமழை.. மூழ்கிய காத்மாண்டு.. 170-ஐ தாண்டிய உயிரிழப்பு!

ஒரே நேரத்தில் 100 ஏவுகணைகளை வீசி தாக்குதல்

டெல் அவிவ் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டதால் வான் எங்கும் ஏவுகணை சைரன்கள் ஒலித்துள்ளன.  இந்த பதட்டமான சூழலை கண்டு பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். எனவே பொதுமக்களை குண்டு துளைக்காத முகாமில் சென்று தஞ்சமடையும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, எக்காரணம் கொண்டும் மீண்டும் அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் களம் கண்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல் உலக நாடுகளிடையே மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : உண்டியல் பணத்தை திருடும் ஊழியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஈரானை கடுமையாக எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் மீது ஈரான் மிக கடுமையான தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், கடும் கோபத்தில் இருக்கும் இஸ்ரேல், எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ஈரான் மிகப்பெரிய வரலாற்று தவறை செய்து விட்டது. இதற்கு அவர்கள் விலை கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியடைந்துள்ளது. எங்களை பாதுகாப்பது மற்றும் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான உறுதியை அந்நாடு புரிந்துக்கொள்ளவில்லை” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – இரானுக்கு இடையே நிலவி வரும் போர் மேலும் மேலும் விரிவடைந்துக்கொண்டே செல்வதால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News