5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

President Election : பெண் அதிபர்களை ஏற்க மறுக்கும் அமெரிக்கா?.. அரசியல் வரலாறு கூறுவது என்ன?

America | ஜோ பைடன் தலைமையிலான அரசின் பதவி காலம் முடிவடைய இருந்த நிலையில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்  குடியரசுக் கட்சி சார்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்து வந்த ஜோ பைடன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

President Election : பெண் அதிபர்களை ஏற்க மறுக்கும் அமெரிக்கா?.. அரசியல் வரலாறு கூறுவது என்ன?
கமலா ஹாரிஸ்
vinalin
Vinalin Sweety | Published: 07 Nov 2024 18:16 PM

அமெரிக்காவில் கடந்த நபம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. ஜோ பைடன் தலைமையிலான அரசின் பதவி காலம் முடிவடைய இருந்த நிலையில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்  குடியரசுக் கட்சி சார்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்து வந்த ஜோ பைடன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிங்க : US Presidential Election: “உண்மையான நண்பர்” சட்டென போன் போட்ட மோடி.. புகழ்ந்து தள்ளிய டொனால்ட் டிரம்ப்!

வயது மூப்பு காரணமாக எதிர்ப்புகளை சந்தித்த பைடன்

இந்த நிலையில் அமெரிக்காவின் அப்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். குறிப்பாக தனது வயது மூப்பு காரணமாக ஜோ பைடன் பல்வேறு விமர்சனங்களை பெற்றார். பிரச்சார மேடைகளில் சம்மந்தம் இல்லாமல் பேசுவது, சிரிப்பது, ஆட்களே இல்லாத இடத்தில் நின்றுக்கொண்டு பேசுவது, மேடை பேச்சுக்களின் போது சில நேரம் பேசாமல் அமைதியாக நின்றுக்கொண்டிருப்பது என அவர் செய்த செயல்கள் சமூக ஊடகங்களில் கிண்டல் செய்யப்பட்டன.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸ்

பைடனுக்கு இவ்வாறு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சொந்த கட்சியினரே அவரை போட்டியில் இருந்து விலகுமாறு கூறியதாக தகவல் வெளியானது. இந்த காலக்கட்டத்தில் தான் ஜோ பைடன், தான் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமன்றி, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்மொழிவதாகவும் அவர் கூறியிருந்தார். அதன்படி, இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டடார்.

இதையும் படிங்க : Air Pollution : பாகிஸ்தானில் கடும் காற்று மாசு.. பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை!

மீண்டும் அதிபரானார் டிரம்ப்

போட்டியாளராக அறிவிக்கப்பட்டது முதலே கமலா ஹாரிஸ் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதுமட்டுமன்றி, எதிர் போட்டியாளர் டொனால்ட் டிரம்ப் உடனும் அவர் நேரடி விவாதம் மேற்கொண்டார். அப்போது, ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற கமலா ஹாரிஸுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கமலா ஹாரிஸ்,  அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பட்டத்தை பெற முடியாமல் போனது.

பெண் அதிபர்களை ஏற்காத அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்கான சத்தியக்கூறுகள் இருப்பதாக ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ் பட்டம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் அதை முறியடித்து விட்டன. இந்த தேர்தல் மட்டுமன்றி, அமெரிக்காவின் கடந்த கால தேர்தல்களிலும் பெண் அதிபர்கள் தோல்வியையே தழுவியுள்ளனர். அமெரிக்காவில் பெண் துணை அதிபர்கள் இருந்த போதிலும், பெண் அதிபர்கள் ஆட்சி செய்ததில்லை.

கடந்த 2 நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் ஆண் அதிபர்கள் மட்டுமே ஆட்சியின் இருந்துள்ளனர். அதாவது, இதுவரை சுமார் 46 அதிபர்கள் அமெரிக்காவை ஆட்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பதுதான் அதிர்ச்சிக்குறிய தகவலாக உள்ளது. அமெரிக்காவின் கடந்த கால தேர்தல்களில் போட்டியிட்ட பெண் போட்டியாளர்கள் தங்கள் கொள்கைகளை விடவும், தங்களது தோற்றத்திற்காகவும், உடைகளுக்காகவும் கேலி, கிண்டல் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : Post Office RD : ரூ.7,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.4,99,564 பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் வரலாற்றை மாற்றி அமைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா மீண்டும் ஒருமுறை ஆண் அதிபரை தேர்வு செய்து, தனது சரித்திரத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News