UNSC Counsil: இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்குமா? பிரட்டன் எடுத்த முடிவு!
இந்தியாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தர உறுப்பினராக சேர்க்க பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மட் ஆதரவு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர பிரதிநிதியாக இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பிரிட்டன் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தர உறுப்பினராக சேர்க்க பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மட் ஆதரவு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர பிரதிநிதியாக இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பிரிட்டன் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது பிரிட்டனும் இணைந்துள்ளது. இந்த நிலையில், நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் 79வது கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவுக்கு பிரிட்டன் ஆதரவு:
இக்கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் பேசுகையில், “ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அதிக பிரதிநிதித்துவம் வாய்ந்த அமைப்பாக மாற வேண்டும். பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆப்பிரிக்காவுக்கு என நிரந்தர உறுப்பினர்கள் இருப்பதை காண விரும்புகிறோம்” என்றார்.
Also Read: 30 நிமிடம்.. பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. என்ன பேசுனாங்க தெரியுமா?
முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்ப்பதற்கு வலுவான ஆதரவை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”பாதுகாப்பு கவுன்சில் மூடப்பட்டிருக்கும் வரை, ஒவ்வொரு தரப்பினரின் நலன்களுக்கும் ஏற்ப, நாம் முன்னோக்கிச் செல்வதில் சிரமம் இருக்கும் என்று நான் கூறுவேன். எனவே இந்த ஐக்கிய நாடுகள் சபையை மிகவும் பயனுள்ளதாக்குவோம்.
முதலில் அவற்றை அதிக பிரதிநிதிகளாக்குவோம். அதனால் தான் பிரான்ஸ் மற்றும் நான் இங்கு மீண்டும் சொல்லுகிறோம். பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கப்படுவதற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் பிரேசில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும், அதே போல் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்த அவர்கள் விரும்பும் இரண்டு நாடுகளை சேர்க்க வேண்டும்” என்றார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்:
ஐக்கிய நாடுகள் சபையில் 193 உறுப்புகள் நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. கடந்த 1945ஆம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. முன்னதாக லீக் ஆப் நேஷன்ஸ் எனும் பெயர் கொண்ட ஒரு அமைப்பாக இருந்து. இந்த அமைப்பு உலக நாடுகளின் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், உலக நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவதற்காகவும் உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்த அமைப்பு தனது நோக்கங்களை நிறைவேற்றாததால் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் என்ற பெயரை மாற்றி நிறுவியது. இந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீன, ரஷியா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியா, கானா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே, ஐக்கிய அரவு அமீரம், அல்பேனியா, பிரேசில், காபோன் ஆகிய நாடுகள் தற்கொலிக உறுப்பினர்களாக உள்ளனர். இதில் நிரந்தரவு உறுப்பினர்களாக இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா ஏன் நிரந்தர உறுப்பினராக முடியவில்லை?
மேலும், 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு ஐ.நா அமைப்பில் சீர்திருந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு அதிக இடமளிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவின் கனவு தற்போது வரை நனவாகாமல் இருக்கிறது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக விரும்பினால் ஐந்து நாடுகளும் சேர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இப்போது வரை அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்குவதை சீனா விரும்புவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா இருந்து வருகிறது.
Also Read: 24 மணி நேரத்தில் விசா.. இனி இலங்கைக்கு ஈஸியா செல்லலாம்!
இந்தியா நிரந்தர உறுப்பினராக மாறினால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை தடுக்க முடியும். உலக பிரச்னைகளில் இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எதையும் செய்ய முடியாத சூழல் இருக்கும். உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் ஆசியாவின் மிகப்பெரிய சக்தியாக உள்ள சீனாவுக்கும் பெரும் பின்னடைவை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.