விடுப்பு தர மறுத்த மேனேஜர்.. அடுத்த 20 நிமிடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்.. அதிர்ச்சி சம்பவம்!
Thailand | தாய்லாந்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பெருங்குடலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 5 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். சிகிச்சைக்கு பிறகும் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லாததால் அந்த பெண் மேலும் 2 நாட்கள் விடுப்பு கேட்டுள்ளார்.
உடல்நல குறைவு காரணமாக விடுப்பு கேட்ட பெண் ஊழியர், மேனேஜர் விடுப்பு அளிக்காததால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர், பணி சுமை காரணமாக உயிரிழந்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது உடல்நல குறைவு ஏற்பட்ட போதும் விடுப்பு தராத நிலையில் பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Breast Cancer: மார்பக புற்றுநோய் பற்றிய பயமா..? வீட்டிலேயே இப்படி பரிசோதனை செய்து பாருங்க!
உடல்நிலை சரியில்லாத போதும் விடுப்பு தர மறுத்த மேனேஜர்
தாய்லாந்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பெருங்குடலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 5 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். சிகிச்சைக்கு பிறகும் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லாததால் அந்த பெண் மேலும் 2 நாட்கள் விடுப்பு கேட்டுள்ளார். மேலும் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி அவர் ஒரு நாள் விடுப்பு கேட்டுள்ளார். அப்போது தனது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதையும் அந்த பெண் தனது மேனேஜரிடம் விளக்கியுள்ளார். அந்த பெண் ஏற்கனவே நிறைய விடுப்பு எடுத்திருந்த நிலையில், புதிய மருத்துவ சான்றிதழுடன் பணிக்கு திரும்புமாறு மேனேஜர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : உண்டியல் பணத்தை திருடும் ஊழியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
பணிக்கு வந்த 20 நிமிடத்தில் மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு
மேனேஜர் விடுப்பு தராத நிலையில், பணியை தக்க வைத்துக்கொள்வதற்காக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த போதிலும் அந்த பெண் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர், பணிக்கு வந்த வெறும் 20 நிமிடங்களிலேயே மயங்கி விழுந்துள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க : Mini – Moon: அடடே..! இன்று முதல் பூமியில் இரண்டு நிலவுகள் தோன்றும்.. இதனை எப்படி பார்ப்பது?
பெண்ணின் மறைவுக்கு வலுக்கும் கண்டனங்கள்
உடல்நல குறைவு காரணமாக விடுப்பு கேட்ட ஊழியருக்கு விடுப்பு அளிக்காத நிலையில், அவர் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. கார்பரேட் உலகில் மனிதாபிமான அழிந்து வருவதாகவும், பணிச்சுமை காரணமாக அதிக உயிரிழப்புகள் நடைபெற்று வருவதாகவும் பலரும் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலை பலுவால் உயிரிழந்த இளம் பெண்
கேரளாவை சேர்ந்த அன்னா செபாஸ்டின் என்ற இளம் பெண் கடந்த மார்ச் மாதம் சி.ஏ.படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் புனேவில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்த நிலையில் வெறும் 4 மாதங்களில் அவர் பணிச்சுமை தாங்காமல் பரிதாபமாத உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரில், தனது மகள் பணிச்சுமை காரணமாக உயிரிழந்துள்ளார். பணியில் சேர்ந்தது முதலே பகல், இரவு, விடுமுறை நாட்கள் என பாராமல் அவர் தொடர்ந்து வேலை செய்து வந்தார். இந்த நிலையில், அதீத பணி சுமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : TN Cabinet Reshuffle: செந்தில் பாலாஜி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யாருக்கு எந்த துறை?
பணி சுமை காரணமாக இந்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது விடுப்பு தராததால் பெண் உயிரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.