உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு.. இவ்வளவு பெருசா? - Tamil News | Worlds second largest 2492 carat diamond found in Botswana know the interesting facts about it | TV9 Tamil

உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு.. இவ்வளவு பெருசா?

Published: 

23 Aug 2024 20:02 PM

Diamond | தங்கம், வெள்ளியை போலவே வைரத்தையும் பொதுமக்கள் வாங்கி சேகரித்து வைக்கின்றனர். அணிகலன்களாக அணிவதற்கு மட்டுமன்றி, வைரத்தை எதிர்காலத்திற்கான முதலீடாகவும் கருதுகின்றனர். அந்த அளவுக்கு வைரத்தின் மதிப்பு உயர்ந்ததாக உள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு.. இவ்வளவு பெருசா?

கண்டுபிடிக்கப்பட்ட வைரம்

Follow Us On

இரண்டாவது மிகப்பெரிய வைரம் எது? : உலகில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களில் ஒன்று தான் வைரம். தங்கம், வெள்ளியை போலவே வைரத்தையும் பொதுமக்கள் வாங்கி சேகரித்து வைக்கின்றனர். அணிகலன்களாக அணிவதற்கு மட்டுமன்றி, வைரத்தை எதிர்காலத்திற்கான முதலீடாகவும் கருதுகின்றனர். அந்த அளவுக்கு வைரத்தின் மதிப்பு உயர்ந்ததாக உள்ளது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : சிமெண்டால் செய்யப்பட்ட பூண்டு.. காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டதால் அதிர்ச்சி!

2492 காரட் வைரம் கண்டுபிடிப்பு – உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரமாக அறிவிப்பு

தென்னாப்ரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான கபரோனில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கெய்ரோ. இங்குள்ள சுரங்கத்தில் இருந்து தான் இந்த 2492 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தை கனடாவின் லுகாரா டயமண்ட் கர்ப் நிறுவனம் கண்டுபிடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரமாக இது உள்ளது.

முதல் மிகப்பெரிய வைரம் எது , எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

கடந்த 1905 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சுமார் 3106 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகின் மிகப்பெரிய வைரமாக உள்ளது. அதன்படி, 1905 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கல்லினன் வைரத்திற்கு பிறகு இரண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது வைரமாக இது உள்ளது. இதற்கு இடையே கடந்த 2019 ஆம் ஆண்டு இதே சுரங்கத்தில் சுமார் 1758 காரட் செவோலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரத்தை விட தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரம் பெரியதாக இருப்பதால் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video: ஹைதராபாத் சாலையில் கொட்டிய பண மழை.. இளைஞர் செயலுக்கு குவியும் கண்டனம்!

1,111 காரட் வைரத்தை ரூ.444 கோடிக்கு வாங்கிய வர்த்தகர்

இதேபோல கடந்த 2017 ஆம் ஆண்டு போட்ஸ்வானாவின் கெய்ரோ சுரங்கத்தில் சுமார் 1,111 காரட் லெசிடி லா ரோனா வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரத்தை பிரிட்டன் வர்த்தகர் ஒருவர் ரூ.444 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version