5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: மாணவர்களே! வெளியான குட் நியூஸ்.. இனி இந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டு 220 நாட்கள் வேலை நாட்கள் என அறிவிப்பை வெளியிட்டது. அதாவது சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என்ற வகையில் இந்த அறிவிப்பு வெளியானது. இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2வது சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டதை அடுத்து 2வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

School Leave: மாணவர்களே! வெளியான குட் நியூஸ்.. இனி  இந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 10 Aug 2024 07:42 AM

பள்ளிகளுக்கு விடுமுறை: இனி மாதந்தோறும் 2 ஆம் மற்றும் 4 ஆம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிகள் 200 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்படும். ஆனால் இந்த நடைமுறையை மாற்றி பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டு 220 நாட்கள் வேலை நாட்கள் என அறிவிப்பை வெளியிட்டது. அதாவது சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என்ற வகையில் இந்த அறிவிப்பு வெளியானது. இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2வது சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டதை அடுத்து 2வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முன்பு இருந்த நடைமுறை போலவே அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதில், ” நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் விடாமுயற்சி படக்குழு… அடுத்த அப்டேட் இதோ!

வங்கி ஊழியர்களுக்கு கூட அனைத்து ஞாயிறு விடுமுறையுடன் கூட ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமைகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே தாங்கள் உடனடியாக இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி அரசு ஊழியர்களைப் போன்று இனி ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிடுமாறு தங்களை வேண்டுகிறோம். இந்த முடிவினை விரைந்து எடுக்க சற்று காலதாமதம் ஆகும் என்று நீங்கள் கருதினால் அதுவரை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையும் நான்காம் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு வேண்டுகிறோம்” என தெரிவிக்கப்பட்டது.

இந்த கடிதத்தை கருத்தில் கொண்டு இன்று அதாவது இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிச்சுமை காரணமாக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியான இன்றும் ஆகஸ்ட் 24 ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Latest News