5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Accident: சென்னை ஈசிஆரில் கோர விபத்து.. உடல் நசுங்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வது வழக்கம். இதனால் அப்பட்குதியில் அவ்வப்போது விபத்துக்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் வேகத்தை கண்காணிக்கும் வகையில் கருவிகள் மற்றும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அப்படி 80 கி.மீ வேகத்தை தாண்டி செல்லும் வாகனங்களின் புகைப்படம் சிசிடிவி கேமிரா எடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதும் உண்டு.

Chennai Accident: சென்னை ஈசிஆரில் கோர விபத்து.. உடல் நசுங்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..
ஈசிஆர் விபத்து
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 04 Sep 2024 08:55 AM

சென்னை விபத்து: கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே கோர விபத்து, பழுதாகி நின்ற லாரி பின்புறம் அதிவேகமாக வந்த கார் மோதியதில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வது வழக்கம். இதனால் அப்பட்குதியில் அவ்வப்போது விபத்துக்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் வேகத்தை கண்காணிக்கும் வகையில் கருவிகள் மற்றும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அப்படி 80 கி.மீ வேகத்தை தாண்டி செல்லும் வாகனங்களின் புகைப்படம் சிசிடிவி கேமிரா எடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதும் உண்டு. அதேபோல, வார இறுதி நாட்களில் அந்த பகுதியில் தடுப்பனைகள் வைக்கப்பட்டு வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மின்தடை.. சென்னையில் எங்கே?

இருப்பினும் அந்த பகுதியில் அவ்வப்போது விபத்துகள் எற்பட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அடுத்த செம்மஞ்சேரி மீனவ பகுதி சாலையில் சென்னையை நோக்கி வந்த ஈச்சர் லோடு லாரி செண்டர் சாப்ட் கட்டாகி பழுதான நிலையில் நின்றுள்ளது, அதே மார்கத்தில் வந்த ஹோண்டா சிட்டி கார் அதிவேகமாக வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் கார் முழுவதும் லாரியின் பின்பக்கதின் கீழ் சிக்கி கொண்டதில் காரில் இருந்து 4 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பராமரிப்பாளர்கள் கிரேன் உதவியுடன் லாரியை தூக்கி காரில் உள்ள உடல்களை மீட்டனர்.

மேலும் படிக்க: அப்படிப்போடு.. தீபாவளி வரை வாராந்திர சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு தொடக்கம்!

மேலும் விபத்துக்கு காரணம் அப்பகுதி மிகவும் வளைவான பகுதியாக உள்ளதாலும் பழுதான லோடு லாரி சாலையில் நின்றதாலும் காரும் அதிகாலையில் வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் காரில் இருந்த இளைஞர்கள் யார், எங்கு சென்றுவந்தனர், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்தனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest News