5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Powercut: மக்களே நோட் பண்ணிகோங்க..! சேலையூர் செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை..

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தரப்பில் தினசரி ஒரு குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். அந்த வகையில் இன்று சென்னையில் உஸ்மான் சாலை, பெசண்ட் நகர், சிறுசேரி, அத்திப்பட் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டது.

Chennai Powercut: மக்களே நோட் பண்ணிகோங்க..! சேலையூர் செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 23 Aug 2024 19:35 PM

மின்தடை: சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் 5 மணி நேரத்திற்கு மின்தடை நிறுத்தப்படுகிறது. இதனால் கீழ்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும்.  தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னையில் எங்கே மின் தடை?

கடப்பேரி : எஸ்.வி.கோயில் தெரு. வி.வி.கோயில் தெரு. ரயில்வே பார்டர் ரோடு, அமர ஜீவா தெரு, சுந்தரம் காலனி 1 முதல் 3வது பிரதான தெரு, ஜெயா நகர் பிரதான சாலை 1 முதல் 3 குறுக்குத் தெருக்கள், வேதாந்தம் காலனி, ஏவலப்பன் தெரு, மாதவன் தெரு, குப்புசாமி தெரு. தெரு, சுந்தராம்பாள் நகர், ஷர்மிளா தெரு, வாட்டர் போர்டு, குமரன் தெரு, ஜீவா தெரு, காமராஜர் நகர், அப்பாராவ் காலனி.

சேலையூர் : இந்திரா நகர், பகவதி நகர். சீனிவாசா நகர். அகரம் மெயின் ரோடு, ஜே.ஜே.ராம் காலனி, அம்பேத்கர் தெரு. லட்சுமி நகர், ஐ.ஏ.எப்., சாலை, நடராஜன் தெரு.

செம்பாக்கம் : டெல்லஸ் அவென்யூ – கட்டம் 1 & 2. அப்துல் கலாம் நகர், பாரதிதாசன் தெரு, நெஷ் அவென்யூ, ஷா அவென்யூ முதலியன.

மேலும் படிக்க: ஊருக்கு போறீங்களா? இன்று முதல் 26 ஆம் தேதி வரை 958 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தரப்பில் தினசரி ஒரு குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். அந்த வகையில் இன்று சென்னையில் உஸ்மான் சாலை, பெசண்ட் நகர், சிறுசேரி, அத்திப்பட் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாளை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது

Latest News