5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Powercut: சென்னையில் இன்று இந்த பகுதிகளில் மின் தடை.. உங்க ஏரியாவில் எப்படி? லிஸ்ட் இதோ..

தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது.

Chennai Powercut: சென்னையில் இன்று இந்த பகுதிகளில் மின் தடை.. உங்க ஏரியாவில் எப்படி? லிஸ்ட் இதோ..
கோப்பு புகைப்படம் (pic courtesy: pixabay)
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 25 Sep 2024 07:10 AM

சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி புது வண்ணாரப்பேட்டை,  கோயம்பேடு, விள்ளிவாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது.

இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் படிக்க: அஞ்சலக FD.. ரூ.25,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. தெரிஞ்சிக்கோங்க!

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் செபடம்பர் 25ஆம் தேதியான இன்று, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, புது வண்ணாரப்பேட்டை,  கோயம்பேடு, விள்ளிவாக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

சென்னையில் எங்கே மின் தடை?

புது வண்ணாரப்பேட்டை:

வடக்கு டெர்மினல் ரோடு, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசிய நகர், நம்மையா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டிதங்கம்மாள் தெரு, ஏஇ கோயில் தெரு, ஏவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டுத் தெரு, கிராமத் தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குவார்ட்டர்ஸ், ஏ.இ. கோயில் தெரு ஆகிய பகுதிளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ரோஹித் உட்பட இந்த வீரர்கள் வெளியேற்றமா..? ஐபிஎல்லில் நடக்கப்போகும் அதிரடி!

கோயம்பேடு

சீனிவாச நகர், பக்தவச்சலம் தெரு, செம்தம்மன் நகர், பி.எச்.ரோடு, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோயில் தெரு, கோயம்பேடு, கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், ஆழ்வார்திரு நகர் பகுதி, நெற்குன்றம் பகுதி, மூகாம்பிகை நகர், அல்கம்மாள் நகர், கிருஷ்ணா நகர். புவனேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: 10 நாட்களில் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா..? இதை பாலோ பண்ணுங்க..!

வில்லிவாக்கம்:

சிட்கோ நகர் 1-10வது பிளாக், அம்மன் குட்டை, நேரு நகர், சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், வில்லிவாக்கம் சுற்றுப்புறங்கள், பாபா நகர், ராஜமங்கலம் மெயின் ரோடு, வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Latest News