5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பெண் காவலர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. ஓராண்டு மகப்பேறு விடுப்பு.. சொந்த ஊருக்கு பணியிட மாற்றம்..!

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் - ஆகியவற்றை பெற்றுள்ள காவலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்த அவர், இந்தப் பதக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பும், திறமையும் தலைவணங்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மனித வளர்ச்சிக் குறியீடுகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

பெண் காவலர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. ஓராண்டு மகப்பேறு விடுப்பு.. சொந்த ஊருக்கு பணியிட மாற்றம்..!
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 23 Aug 2024 21:02 PM

பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு: சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவல்துறையினருக்கான பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதக்கங்களை வழங்கும் விழாவை துவங்கி வைத்தார். குறிப்பாக மத்திய அரசு பதக்கங்கள் மற்றும் மாநில அரசு பதக்கங்கள் என பத்து வகையான பதக்கங்களை காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கினார். அப்போது விழா நிகழ்ச்சியில் பேருரை ஆற்றிய தமிழக முதல்வர்,
முதலமைச்சர் என்ற முறையில் தினமும் பல்வேறு துறைகள் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்று காவல்துறை சார்பாக நடக்கும் விழாவில் பங்கெடுக்கிறேன் என்று சொன்னால் என்னுடைய துறையின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால், கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைகிறேன் என தெரிவித்தார்.

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் – ஆகியவற்றை பெற்றுள்ள காவலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்த அவர், இந்தப் பதக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பும், திறமையும் தலைவணங்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மனித வளர்ச்சிக் குறியீடுகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

மேலும் படிக்க: மக்களே நோட் பண்ணிகோங்க..! சேலையூர் செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை..

சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் பதக்கமும் விருதும் வழங்கிப் பாராட்டுவதை 1969-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தவரே அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர், பதக்கம் கொடுக்கத் தொடங்கி 55 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடமையை செய்தால், அதற்கான பாராட்டும் பலனும் உங்களை தேடி வந்து சேரும். காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதல் காவல் ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்,. இந்த ஆணையத்தை அமைத்து காவலர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்து வருகிறோம்.

காவல்துறையில் முதன்முதலாக மகளிரை இடம்பெறச் செய்தது மறைந்த முதல்வர் கலைஞர், தனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை கமாண்டாராக ஒரு பெண் அதிகாரி இருந்து மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும்மகளிர் பொன்விழா ஆண்டான இப்போது, மகளிர் காவலர்களிடையே நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கோரிக்கையை முக்கிய அறிவிப்பாக வெளியிடுகிறேன்.

மேலும் படிக்க: உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு.. இவ்வளவு பெருசா?

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து, அவர்கள் பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது.

குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்கும் துறையாக செயல்பட வேண்டும். மனித வளர்ச்சியின் அனைத்துக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு – குற்றச் சம்பவங்களில் பூஜ்ஜியமாக இருந்தால்தான், நமக்கெல்லாம் பெருமை. இதில் பூஜ்ஜியம் வாங்க – 100 விழுக்காடு அர்ப்பணிப்புடன், அனைத்துக் காவலர்களும் பணியாற்ற வேண்டும்.

தமிழக முதல்வரின் பெண் காவலர்களுக்கான சிறப்பு அறிவிப்பிற்கு விருது பெற்ற பெண் காவலர்கள் மிகுந்த வரவேற்பை தெரிவித்துள்ளனர். அச்சமில்லாமல் குழந்தையை பெற்றோர்கள் வீட்டில் விட்டுவிட்டு பணியை செய்ய முடியும் எனவும் பணியில் சிறந்து விளங்க முதல்வரின் அறிவிப்பு உற்சாகம் அளிப்பதாகவும் பெண் காவலர்கள் தெரிவித்துள்ளனர். பெண் காவலர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்

Latest News