5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மகாகவி பாரதியாரின் நினைவு நாள்.. செப். 11? செப். 12? எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி சொன்ன தகவல் என்ன?

சுதேச மித்ரன் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றினார். நாட்டின் விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் தன் படைப்புகளின் மூலம் சுதந்திர வேட்கையை மக்களிடம் கொண்டு சேர்த்தார். தேச பற்று, பெண்கள் உரிமை, சாதி ஒழிப்பு என மக்களிடையே அவர் கொடுத்த தாக்கத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. இன்று பிறக்கும் குழந்தைக்கு கூட நாம் ஓடி விளையாடு பாப்பா என்ற மகாகவி பாரதியாரின் பாடலை பாடி தான் விளையாட சொல்லிக்கொடுக்கிறோம்.

மகாகவி பாரதியாரின் நினைவு நாள்.. செப். 11? செப். 12? எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி சொன்ன தகவல் என்ன?
மகாகவி பாரதியார் (Photo Credit: wikipedia Commons)
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 12 Sep 2024 13:12 PM

மகாகவி பாரதியாரின் நினைவு நாள்: மகாகவி பாரதியாரின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது பாரதியாரின் 103 வது நினைவு நாள். பாரதியார் டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்தார். பாரதியார் பதினொன்றாம் வயதிலிருந்தே கவிதைகளை எழுத தொடங்கிவிட்டார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சுதேச மித்ரன் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றினார். நாட்டின் விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் தன் படைப்புகளின் மூலம் சுதந்திர வேட்கையை மக்களிடம் கொண்டு சேர்த்தார். தேச பற்று, பெண்கள் உரிமை, சாதி ஒழிப்பு என மக்களிடையே அவர் கொடுத்த தாக்கத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. இன்று பிறக்கும் குழந்தைக்கு கூட நாம் ஓடி விளையாடு பாப்பா என்ற மகாகவி பாரதியாரின் பாடலை பாடி தான் விளையாட சொல்லிக்கொடுக்கிறோம். மகாகவி பாரதியார் என்ற சொல்லை கேட்கும் போதே நம் உடல் சிலிர்க்கும், ஒரு உத்வேகம் பிறக்கும்.

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் தமிழ்நாடு அரசு தரப்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் இருக்கும் பாரதியார் சிலைக்கு அருகில் இருந்த திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்தியநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


அதேபோல் சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் இருக்கும் பாரதியார் திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், “ பாரத தாயின் மாபெரும் புதல்வர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களை அவரது நினைவு தினத்தில் நன்றியுள்ள தேசம் நினைவுகூர்கிறது. தேசிய ஒற்றுமை மற்றும் மகளிருக்கு அதிகாரமளிக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த அவரது எழுச்சியூட்டும் தேசபக்தி கவிதைகள் மற்றும் பாடல்கள், இந்திய விடுதலை இயக்கத்தின் போது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. அவை இன்றும் நம் இதயங்களில் ஆழமாக எதிரொலிக்கின்றன. மேலும் வலுவான மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க நம்மைத் தூண்டுகின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கார் – லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சோகம்.

ஆனால் உண்மையில் பாரதியார் நினைவு நாள் என்று அனுசரிக்கப்படுகிறது? இதில் பலருக்கும் இன்றளவும் குழப்பம் நீடிக்கிறது. பாரதியாரின் நினைவு நாள் செப்டம்பர் 12 ஆம் தேதி தான் என அவரது எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் அவரிடம் விளக்கம் கேட்ட போது, “ மகாகவி பாரதி செப்டம்பர் 11 ஆம் தேதி நள்ளிரவு இயற்கை எய்தினார். ஹிந்து சாஸ்திரத்தின் படி காலை 6 மணிக்கு ஒரு நாள் தொடங்குகிறது. எனவே செப்டம்பர் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலேயர்கள் பொறுத்தவரை நள்ளிரவு 12 மணி தாண்டினால் அது அடுத்த நாள் கணக்கு.

அப்படி பார்த்தார் அவர் மறைந்தது செப்டம்பர் 12. ஆனால் ஹிந்து முறைப்படி நாம் செப்டம்பர் 11 ஆம் தேதி கொண்டாடுகிறோம். அவரது இறப்பு சான்றிதழிமும் செப்டம்பர் 12 ஆம் தேதி என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த தகவல் பரவாமல், செப்டம்பர் 11 என்று பரவியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கமிட்டி கூடியது. அதில் நானும் இருந்தேன் அப்போது எந்த தேதியை வைத்துக்கொள்ளலாம் என பேசப்பட்டது. மக்களின் உணர்ச்சியோடு இணைந்த ஒரு விஷயத்தை நாம் அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது.

மேலும் படிக்க: வாழ்க்கையில் சரிவு.. கைகொடுத்த ஜெயலலிதா.. விந்தியா நெகிழ்ச்சி!

அதனால் பாரதியாரின் நினைவு நாளை நாம் இரண்டு நாட்களிலுமே கொண்டாடலாம். செப்டம்பர் 11 அல்லது 12 என எந்த தேதியில் வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஒருவருக்கு இரண்டு நினைவு நாள் இருப்பது இதுவே முதல்முறையாகும். அதுவும் நம் மகாகவி பாரதியாருக்கு அமைந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Latest News