5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி..

இன்றைய சுதந்திர நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 16 மாதங்களுக்குள் பல்வேறு பணி நியமனங்கள் நடைபெற இருக்கிறது என்பதையும் ஏற்கெனவே நான் அறிவித்திருக்கிறேன். அதன்படி, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதையும் உவகையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி..
சுதந்திர நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 15 Aug 2024 15:52 PM

சுதந்திர தினம் 2024: நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் இருக்கும் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார். அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும், அம்மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றி வணங்கினார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார். அதன் பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், ” இந்த விடுதலை எளிதாக கிடைத்த விடுதலை அல்ல. 300 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கிடைத்த சுதந்திரம் இது. ரத்தத்ததையே வியர்வையாக தந்து தங்கள் உடலையே விடுதலை களத்திற்கு உணவாக தந்து எண்ணற்ற தியாகிகள் நம் இந்திய மண்ணில் உண்டு. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் உண்டு.


மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத்தந்தவர் கருணாநிதி. 4வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன். தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, அடுத்த 18 மாதங்களுக்குள் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், அடுத்த 18 மாதங்களுக்குள் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

Also Read: நிலச்சரிவில் துணிச்சலுடன் செயல்பட்ட செவிலியர் சபீனா.. கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்த அரசு..

வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 16 மாதங்களுக்குள் பல்வேறு பணி நியமனங்கள் நடைபெற இருக்கிறது என்பதையும் ஏற்கெனவே நான் அறிவித்திருக்கிறேன். அதன்படி, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதையும் உவகையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு தொழிற்துறையில் புதிய பாய்ச்சலைக் கண்டுவருகிறது. அதற்கு அடையாளமாகத்தான், கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடைபெற்ற “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்” முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, 6 இலட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது.

Also Read:  என்னையே வில்லனாக்குறியா? அர்ஜூன் கேள்வியால் பம்மிய விஷால்!

இதன் மூலம், 14 இலட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 12 இலட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க உள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும் இன்றைய நிகழ்ச்சியில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தகைசால் விருது வழங்கப்பட்டது. அதேபோல், அப்துல் கலாம் விருது வீரமுத்துவேலுக்கும், கல்பனா சாவ்லா விருது செவிலியர் சபீனாவிற்கும் வழங்கப்பட்டது.

Latest News