பால் ஜீவன் பீமா யோஜனா.. ரூ.6 செலுத்தினால் போதும் ரூ.1,00,000 கிடைக்கும்.. குழந்தைகளுக்கான அசத்தல் திட்டம்! - Tamil News | You can get 1 lakh rupees by investing 6 rupees daily | TV9 Tamil

பால் ஜீவன் பீமா யோஜனா.. ரூ.6 செலுத்தினால் போதும் ரூ.1,00,000 கிடைக்கும்.. குழந்தைகளுக்கான அசத்தல் திட்டம்!

Updated On: 

04 Jul 2024 19:06 PM

Bal jeevan bima yojana | பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் தினமும் ரூ.6 முதலீடு செய்து ரூ.1 லட்சம் பெறலாம். 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும் இந்த திட்டத்தில் தினமும் ரூ.6 முதலீடு செய்யும் பட்சத்தில் 5 வருடங்களில் திட்டம் முதிர்ச்சி அடையும்போது ரூ.1 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

பால் ஜீவன் பீமா யோஜனா.. ரூ.6 செலுத்தினால் போதும் ரூ.1,00,000 கிடைக்கும்.. குழந்தைகளுக்கான அசத்தல் திட்டம்!

மாதிரி புகைப்படம்

Follow Us On

பால் ஜீவன் பீமா யோஜனா : பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறும் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவை சிறந்த வட்டியுடன் கூடிய முதலீட்டு திட்டங்களாக உள்ளன. அந்த வகையில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட திட்டம்தான் பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம். குழந்தைகளுக்காக தபால் நிலையங்களில் கொண்டுவரப்பட்ட காப்பீட்டு திட்டம் தான் பால் ஜீவன் பீமா யோஜனா. இந்த திட்டத்தில் வெறும் ரூ.6 செலுத்தில் ரூ.1 லட்சம் வரையிலான காப்பீட்டை பெற முடியும். பால் ஜீவன் யோஜனா திட்டம் என்றால் என்ன, அதில் எவ்வாறு முதலீடு செய்வது மற்றும் அதன் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

ரூ. 6 செலுத்தினால் போதும் ரூ.1 லட்சம் பெறலாம்

இந்த திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பெயரில் தினமும் ரூ.6 முதலீடு செய்தால் போதும். இவ்வாறு குறிப்பிட்ட  சில ஆண்டுகளுக்கு தினமும் ரூ.6 முதலீடு செய்வதன் மூலம் திட்டத்தின் முதிர்வு காலத்தில் உங்களுக்கு ரூ.1 லட்சம் பணம் கிடைக்கும். அதாவது குழந்தைகளின் பெயரில் ரூ.6 முதல் ரூ.18 வரையிலான பிரீமியம் டெபாசிட் செய்யலாம். அதன்படி 5 வருடங்களுக்கு தினமும் ரூ.6 பிரீமியமாக டெபாசிட் செய்ய வேண்டும். மொத்தம் 20 வருடங்களுக்கு ரூ.18 பிரீமியம் டெபாசிட் செய்ய வேண்டும். இவ்வாறு 5 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.6 முதலீடு செய்தால் திட்டம் முதிர்ச்சியடைந்த உடன் ரூ.1 லட்சம் கிடைக்கும்.

பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்க பெற்றோரின் வயது வரம்பு என்ன?

பால் ஜீவன் பீமா காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்த குழந்தை எதிர்பாராத வகையில் உயிரிழந்துவிட்டால், அந்த குழந்தையின் பெயரில் ரூ.1,00,000 வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கும் மிகாமல் இருக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட பெற்றோரால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 3வது குழந்தைக்கு விண்ணப்பிக்க முடியாது.

இதையும் படிங்க : Union Budjet 2024: ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படுமா? பட்ஜெட் மீது எகிறும் எதிர்பார்ப்புகள்!

பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்க குழந்தைகளின் வயது வரம்பு என்ன?

பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது குழந்தைகள் என்ன வயதில் இருக்கிறார்களோ அதே வயது தான் திட்டத்தின் முதிர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர் தங்களது வீட்டின் அருகில் உள்ள தாபால் நிலையங்களுக்கு சென்று திட்டத்திற்கு தேவையான உரிய விண்ணப்பங்களை சமர்பித்து விண்ணப்பிக்கலாம்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version