TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் பதவியேற்பு.. தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும் என உறுதி..! - Tamil News | Additional Chief Secretary SK Prabhakar IAS was sworn in as its new Chairman at the Tamil Nadu Public Service Commission | TV9 Tamil

TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் பதவியேற்பு.. தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும் என உறுதி..!

Updated On: 

23 Aug 2024 15:53 PM

தமிழ்நாடு அரசு பணிகளில் சேர வேண்டும் என்ற கனவோடு அரசு பணியாளர் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். அதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம் கால அட்டவணை தேர்வு செய்து நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளை நேர்மையாக நடத்த தலைவர் என்ற முறையில் உறுதியளிப்பதாகவும், தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம்,என தலைவர் தெரிவித்துள்ளார்.

TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் பதவியேற்பு.. தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும் என உறுதி..!

மாதிரி புகைப்படம்

Follow Us On

டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவர்: சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் அதன் புதிய தலைவராக கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ் பதவியேற்றார். கடந்த 2022ல் டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது எஸ்.கே.பிரபாகர் தேர்வாணையத்தின் 27வது தலைவராக பதவியேற்றார். 2028ம் ஆண்டு வரை எஸ்.கே.பிரபாகர் இந்த பதவியில் வகிக்க உள்ளார். இதையடுத்து, பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில், தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபாகர், டிஎன்பிசி தேர்வுகள் முறையாக நடத்தப்படும் என்று தலைவராக நான் உறுதியளிக்கிறேன். தேர்வுக்கு பிந்தைய முடிவுகள் உடனடியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழ்நாடு அரசு பணிகளில் சேர வேண்டும் என்ற கனவோடு அரசு பணியாளர் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். அதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம் கால அட்டவணை தேர்வு செய்து நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளை நேர்மையாக நடத்த தலைவர் என்ற முறையில் உறுதியளிப்பதாகவும், தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம், என்றார்.

Also Read: நடிகர் சூர்யா ரூ.120 கோடிக்கு தனி விமானம் வாங்கினாரா? உண்மை இதுதான்!

இந்த தேர்வுகளைத் தாண்டி மற்ற போட்டி தேர்வுகளையும் மாணவர்கள் எழுதுகிறார்கள். இரு தேர்வுகளும் ஒரே நாளில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதாகவும், தமிழ்நாடு அரசு பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கனவுகள் நிறைவேற அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம் என குறிப்பிட்டார்.

தேர்வாணையத்தை மேம்படுத்த கடந்த இரண்டு வாரங்களாக பலரும் ஆலோசனைகள் வழங்கி வருவதாகவும், சிறப்பாக இன்னும் செயல்படுத்தும் வகையில் நடத்துவோம். தேர்வு எழுதிய பின் முடிவுகள் விரைவில் வந்தால் தான் இந்த பணியில் சேர்வதால் அல்லது வேறு முயற்சி எடுப்பதா என்று முடிவு எடுக்க முடியும். இருக்கும் நடைமுறை சிக்கல்களை பார்த்து மற்ற தேர்வுகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் கவனித்து அதை பின்பற்றவும் முயற்சி எடுத்து வருகிறோம். தேர்வுக்கு, தேர்வு முடிவுகளுக்கும் இருக்கும் இடைவெளியை நிச்சயம் குறைக்க நடவடிக்கை எடுப்போம்.

Also Read: பரபரப்பாக பேசப்பட்ட ஹேமா கமிஷன் அறிக்கை… எந்த பலனும் இல்லை என நடிகை தனுஸ்ரீ தத்தா காட்டாம்

தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் இருக்கக்கூடிய காலதாமதத்தை குறைப்பதே எங்களுடைய முதல் பணி என்ற அவர், ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு ஆண்டும், தேர்வுகள் குறிப்பிட்ட கால அட்டவணைகளில் நடப்பதற்கும் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெரிய புகார்கள் இல்லாமல் தரமான முறையில் அரசு தேர்வுகள் நடத்தி வருகிறது. இதை மேம்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, வரும் குறைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

டிஆர்பியில் இந்த வாரம் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
இந்த கியூட் பையன் இப்போ பெரிய நடிகர்!
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
Exit mobile version