”அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன் “ – மகாவிஷ்ணு விவகாரத்தில் கொந்தளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.. - Tamil News | tamil nadu school education minister anbil mahesh stated that necessary actions will be taken against the incident which took place in school | TV9 Tamil

”அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன் “ – மகாவிஷ்ணு விவகாரத்தில் கொந்தளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..

Updated On: 

06 Sep 2024 15:08 PM

பத்மஸ்ரீ மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நேற்று நிகழ்த்தினார். அப்போது கல்விக்கும் அறிவியலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல், அறிவு சார்ந்த பேச்சு பேசாமல், “முன் ஜென்ம தவறுகளால் தான் தற்போது ஏற்றத் தாழ்வுகளுடன் மாற்றுத்திறனாளியாகவும், வீடில்லாதவராகவும், நோய் நொடிகளுடன் கூடியவராகவும் மனிதனை கடவுள் படைக்கிறார். இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரியாக படைத்திருக்கலாமே?. போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதை பொறுத்து தான் இந்த ஜென்மத்தில் இந்த பிறவி கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

”அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன் “ - மகாவிஷ்ணு விவகாரத்தில் கொந்தளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..

அமைச்சர் அன்பில் மகேஷ் (pic courtesy: twitter)

Follow Us On

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி: சர்ச்சைக்குரிய வகையில் அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணுவை தட்டிக்கேட்ட ஆசிரியரை அவமானப்படுத்திய விவகாரத்தில் ” என்னோடு எல்லைக்குள் வந்து எனது துறையில் உள்ள ஒரு ஆசிரியரை அவர் அவமானப்படுத்தி உள்ளார் அவரை சும்மா விடமாட்டேன் ” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நடைபெற்ற நிகழ்வு சார்பாக விசாரணை நடத்தி நடந்தது என்ன என்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை தரப்பில் ஆராய்ந்து யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளார். அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை மாதிரி பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்பின் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ நடைபெற்ற நிகழ்வு சார்பாக விசாரணை நடத்தி நடந்தது என்ன என்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை தரப்பில் ஆராய்ந்து யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி மட்டுமே மிகப் பெரிய ஆயுதம். ஏற்கனவே கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுத்தோம் இதற்கு காரணம் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தீவிர விசாரணை செய்தால்தான் இது பள்ளி மேலாண்மை குழு மூலமாக நடந்ததா? அல்லது தலைமை ஆசிரியர் அல்லது அதிகாரிகள் கவனத்திற்கு வந்துதான் நடந்ததா என்று தெரிந்து கொள்ள முடியும்.

Also Read:  காவல் நிலையம் கட்ட ரூ.2 கோடி நிலத்தை கொடுத்த தொழிலதிபர்!

அசோக் நகர் பள்ளியில் பல வரலாறு, சாதனைகளை செய்து உள்ளது. இந்த நிகழ்வு கண்டிக்க கூடியதாக உள்ளது. உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதா? என்று விசாரிக்கப்படும். ஆசிரியர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மகாவிஷ்ணு பேசுவது தவறு என எதிர்த்து கேள்வி கேட்ட சைதாப்பேட்டை மாதிரி பள்ளி தமிழ் ஆசிரியர் சங்கர் ஒரு உதாரணம் என தெரிவித்தார். தமிழ்நாடு அரசு பள்ளி பாடத்திட்டத்தை பற்றி ஆளுநர் கருத்து தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு இங்கிருக்கும் செய்தியாளர்கள் பலர் மாநில பாடத்திட்டத்தில் படித்திருப்பீர்கள், உங்களது உறவினர்கள் நண்பர்கள் கூட மாநில பாடத்திட்டத்தில் படித்து இருப்பார்கள் அவர்களெல்லாம் வீணாக போய்விட்டார்களா நமது மாநில பாடத்திட்டம் பற்றி ஆளுநர் கருத்து தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மாநில பாடத்திட்டம் மற்றும் எங்கள் மாணவர்கள் பற்றியும் பேசுவது அவர்களை அவமானம் படுத்துவதற்கு சமம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாநில பாடத்திட்டம் குறித்து விமர்சனம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். மாணவர்கள் மத்தியில் பேச வருபவர்கள் யார் என்று தெரிந்து கொண்டு தான் அவர்களை பேச அனுமதிக்க வேண்டும். மேடவாக்கம் பகுதியில் மாணவர்கள் ஆசிரியர்கள் கால்களை கழுவுவது போன்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது தொடர்பான கேள்வி, பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கால்களை கழுவுவது போன்ற நிகழ்ச்சி எல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் என்றே தெரியவில்லை அதற்கு விளக்கம் கேட்கப்படும். காணொளி மூலம் பார்த்ததை வைத்து மகா விஷ்ணு என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் . பள்ளி வளாகத்தில் வந்து இப்படி செய்தவரை அவ்வளவு சீக்கிரமாக சும்மா விடமாட்டேன்.

Also Read: வங்கக்கடலில் உருவாகும் புயல்.. தமிழகத்திற்கு எச்சரிக்கை.. வானிலை சொல்லும் தகவல் இதோ..

மகாவிஷ்ணு மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்படுமா என்கிற கேள்விக்கு ” என்னோடு எல்லைக்குள் வந்து எனது துறையில் உள்ள ஒரு ஆசிரியரை அவர் அவமானப்படுத்தி உள்ளார் அவரை சும்மா விடமாட்டேன் ” என தெரிவித்தார். இந்த நிலையில் அசோக்நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவு நடந்த புகாரில் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version