Vikrant Massey: குடும்பம் தான் முக்கியம்.. சினிமாவை விட்டு விலகிய பிரபல நடிகர்!
Bollywood: 2013 ஆம் ஆண்டு லூட்டேரா திரைப்படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமானார். விக்ராந்த் 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு டெத் இன் தி கஞ்ச் திரைப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
சினிமாவை விட்டு விலகுவதாக பிரபல பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி அறிவித்துள்ளது ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில வருடங்கள் மற்றும் அதற்குப் பின் நடந்தவை அனைத்தும் சிறப்பானவை. என்றும் அழிக்கவே முடியாத ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் வாழ்க்கையில் முன்னோக்கி செல்லும்போது, ஒரு கணவன், தந்தை, மகன் மற்றும் நடிகனாக வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரத்தை உணர்கிறேன். 2025 ஆம் ஆண்டு வரும் நிலையில் நேரம் சரியாக இருக்கும் வரை நாம் ஒருவரையொருவர் கடைசியாக சந்திப்போம். கடந்த 2 படங்கள் மற்றும் பல வருட நினைவுகள் என்று எல்லாவற்றிற்கும் மற்றும் இடையில் உள்ள எல்லாவற்றுக்கும் அனைத்திற்கும் மீண்டும் நன்றி. என்றும் கடன்பட்டவன்!” என தெரிவித்துள்ளார்.
Also Read: ஓடிடியில் கலக்கும் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
View this post on Instagram
திரைப்பயணம்
விக்ராந்த் தனது நடிப்பு பயணத்தை சின்னத்திரையில் இருந்து தொடங்கினார். முதல் முறையாக தூம் மச்சாவோ தூம் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். அவர் 2009 இல் பாலிகா வது மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். பின்னர் 2013 ஆம் ஆண்டு லூட்டேரா திரைப்படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமானார். விக்ராந்த் 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு டெத் இன் தி கஞ்ச் திரைப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இதனையடுத்து ஜின்னி வெட்ஸ் சன்னி, ஹசீன் தில்ருபா, காதல் விடுதி ஆகிய படங்களில் நடித்த அவரை 12th பெயில் படம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. மொழிகளை கடந்து பலரும் விக்ராந்த் மாஸ்ஸியின் ரசிகர்களாக மாறினர்.
Also Read: Actress Sobhita: பிரபல கன்னட நடிகை ஷோபிதா தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
அவர் தற்போது யார் ஜிக்ரி மற்றும் ஆன்கோன் கி குஸ்தாகியான் ஆகிய என்ற இருபடங்களில் நடித்து வருகிறார். இவை இரண்டு 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட சதாப்தி எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். மேலும் செக்டார் 36 படமும் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இப்படியான நிலையில் தான் விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். பொதுவாக நடிகைகள் திருமணம் போன்ற காரணங்களுக்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்வர் அல்லது முழுவதுமாக விலகுவார். ஆனால் தற்போது ஒரு உச்சநிலையை எட்டி வரும் நடிகர் சினிமாவே வேண்டாம் என சொல்வது ஆச்சரியமளிப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள் வருத்தம்
விக்ராந்த் மாஸ்ஸியின் அறிவிப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. சினிமா உலகைச் சேர்ந்தவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு இணையவாசி, “ஷாருக்கான் ஒரு கணவர் மற்றும் தந்தையும் கூட. இரண்டையும் பேலன்ஸ் செய்யத் தெரிந்தால் இந்த இரண்டுக்கும் எந்த மோதலும் இல்லை! இது உண்மையாக இருந்தால், அது பல இதயங்களை உடைக்கும், ஏனென்றால் உங்களைப் போன்ற நடிகர்களை இந்த துறையில் நாங்கள் விரும்புகிறோம் !!” என தெரிவித்துள்ளார்.
இன்னொருவர், “எல்லாம் சரியாக இருக்கிறதா? இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. உங்கள் நடிப்பையும் திரைப்படங்களையும் நாங்கள் மிகவும் விரும்புகிறோம்.சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்ற திறமையான நடிகரை நாம் ஏற்கனவே இழந்துவிட்டோம். நாங்கள் உங்களை இழக்க விரும்பவில்லை! திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுங்கள். ஆனால் பாலிவுட்டுக்கு உங்களைப் போன்ற திறமையான நடிகர்கள் தேவை” என தெரிவித்துள்ளார்.
விக்ராந்த் மாஸ்ஸி வாழ்க்கை
1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி பிறந்த விக்ராந்த் மாசி சிறுவயது முதலே நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர், பிறந்தது சிம்லாவில் இருந்தாலும், மகாராஷ்டிராவின் மும்பை நகரத்தில் தான் வளர்ந்தார். சிறு வயது முதல் நடனத்திலும் திறமையானவராக இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்கும் நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேடை ஏறினார். அதுவே அவரை சினிமா வரை கொண்டு வந்து சேர்த்தது. அவரது மனைவி ஷீத்தல் தாக்கூரும் பாலிவுட்டில் நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.