Dhanush – Aishwarya: திருமண வாழ்க்கை ஓவர்.. தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த திருமணத்தை இரு வீட்டாரும் இணைந்து முழு சம்மதத்துடன் சிறப்பாக நடத்தி வைத்தனர்.

Dhanush - Aishwarya: திருமண வாழ்க்கை ஓவர்.. தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

27 Nov 2024 21:18 PM

நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருவருக்குமிடையேயான ஒருமித்த கருத்து அடிப்படையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி என கொண்டாடப்பட்ட தனுஷ்- ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read: Vetrimaaran: மேடையில் கடுப்பான வெற்றிமாறன்.. பதறிய விஜய்சேதுபதி, சூரி.. என்ன நடந்தது?

தனுஷை விட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர் என்ற போதிலும் இந்த திருமணத்தை இரு வீட்டாரும் இணைந்து முழு சம்மதத்துடன் சிறப்பாக நடத்தி வைத்தனர். தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்த தம்பதியினர் தமிழ் சினிமாவின் பேவரைட் ஜோடியாக திகழ்ந்தனர். மேலும் ஐஸ்வர்யா தனுஷை வைத்து “3” என்ற படத்தை இயக்கி அதன்மூலம் இயக்குநரானார். மேலும் வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

இப்படியான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகுவதாக தடாலடியாக எக்ஸ் வலைத்தளம் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்தனர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவு இன்றளவும் கோலிவுட்டில் பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. நடிக்க வந்த புதிதில் தனுஷ் ஏராளமான கேலிக் கிண்டலுக்கு உள்ளானார்.

ஆனால் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஆன ரஜினிகாந்த் தனது மகளை தனுசுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணம் செய்து வைத்து உச்சரியப்படுத்தி இருந்தார். திருமணத்திற்கு பிறகு தனுஷின் நடை உடை பாவனை பேச்சு என எல்லாவற்றிலும் ஐஸ்வர்யா தான் மாற்றம் கொண்டு வந்தார். அதேசமயம் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் தனக்கான வேலை சரியாக செய்து தனுஷ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச நடிகர். மேலும் தேசிய விருதுகள் தொடங்கி பல விருதுகளை வாங்கி குவித்தார். ரஜினிக்கு என்றும் பேர் சொல்லும் மருமகன், இல்லை மகனாகவே இருந்தார்.

இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில் இரண்டு குடும்பத்தினரும், நண்பர்கள் என பலரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பிரிவதில் இருவரும் உறுதியாக இருந்தனர். இந்த நிலையில் தான் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இந்த நிலையில் இந்த விவாகரத்து தொடர்பான வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மகன்கள் இருவரும் தொடர்பான விஷயங்களில் மட்டும் தனுஷ், ஐஸ்வர்யா ஒன்றாக கலந்து கொண்டனர்.

Also Read: Astrology: அப்படிப்போடு.. 6 ராசிகளுக்கு ஆபீஸில் பிரமோஷன் நிச்சயம்!

இதனிடையே 3 முறை ஆஜராக சொல்லியும் இருவரும் ஆஜராத நிலையில் கடைசியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். இருதரப்பையும் விசாரித்த நீதிபதி இன்று அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார். இந்த சம்பவம் தனுஷ் ரசிகர்களிடையேசோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து அறிவிப்பு வெளியான பிறகு தான் கடும் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த அதிலிருந்து வெளியே வர மீண்டும் படம் இயக்குவதில் கவனம் செலுத்தினார். அப்படித்தான் இந்தாண்டு லால் சலாம் படம் வெளியாகியிருந்தது. இதில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்,

மேலும் மகள் விவாகரத்து பெற்றதில் ரஜினிகாந்த் சற்று அதிருப்தியுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளைய மகள் சௌந்தர்யாவும் முதலில் அஸ்வின் என்ற நபரை திருமணம் செய்த நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. தங்கை வழியில் ஐஸ்வர்யாவும் 2வது திருமணம் செய்துக் கொள்வாரா? அல்லது தனக்கான பாதையில் ஜொலிப்பாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

கல்யாணம் கன்ஃபார்ம்... வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோ
இணையத்தை கலக்கும் பர்த்டே பேபி அனிகாவின் போட்டோஸ்
ஹீமோகுலோபின் அதிகரிக்க இந்த 7 ஜூஸ் ட்ரை பண்ணுங்க..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை நிச்சயம் சாப்பிடக்கூடாது.