5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Director Shankar: இயக்குனர் ஷங்கரின் அடுத்தடுத்து 3 வித்தியாசமான கதைக்களங்கள் என்ன தெரியுமா..?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தியன் 2 வெளியாக உள்ள நிலையில், 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் சூட்டிங் உள்ளதாகவும், அடுத்து இந்தியன் 3 என அடுத்தடுத்து வெளியீட்டிற்கு இயக்குனர் சங்கரின் திரைப்படங்கள் காத்திருக்கின்றன. மேலும் அவர் தன்னுடைய அடுத்தப்படம் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.

Director Shankar: இயக்குனர் ஷங்கரின் அடுத்தடுத்து 3 வித்தியாசமான கதைக்களங்கள் என்ன தெரியுமா..?
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 03 Jul 2024 17:22 PM

லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இதில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் ஜூலை 12 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. கடந்த வாரம் இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது .இதனை தொடர்ந்து இந்தியன் 3 படத்திற்கான வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

Also Read: Actor Vijay : நீட் தேர்வுக்கு இதுதான் தீர்வு.. மாணவர்கள் விழாவில் யோசனை சொன்ன நடிகர் விஜய்!

இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இன்னும் குறைவான நாட்களே இருப்பதால், படத்தின் ப்ரோமோஷனுக்கான பணிகளை படக்குழு விறுவிறுப்பாக செய்து வருகிறது. ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷங்கர், அடுத்துத் இயக்கப்போகும் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தற்போது எனக்கு 3 ஐடியாக்கள் வந்துள்ளன. ஒன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க படத்தை இயக்க வேண்டும், அடுத்து ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ஒரு படம், மற்றொன்று சைஃபை கதைக்களத்துத்துடன் ஒரு படம் அந்த படத்தை 2012 என்ற பெயரில் உருவாக்க உள்ளதாக கூறினார். சரித்திரக் கதை, ஜேம்ஸ் பான்ட் படம் மாதிரியான கதை, ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை என மூன்று கதைகளை வைத்துள்ளாராம் ஷங்கர். ஆனால், மூன்று படங்களுமே அதிக பொருட்செலவில் எடுக்க வேண்டியுள்ள படம் என்றும் தெரிவித்துள்ளார். அந்தப் படங்களில் அதிக விஎப்எக்ஸ் காட்சிகள், புதிய தொழில்நுட்பம் ஆகியவை இருக்கும் என்று கூறியுள்ளார்.

Also Read: OTT : மாதாந்திர பிளான்களின் விலையை உயர்த்திய Netflix.. அதிர்ச்சியில் பயனர்கள்.. எவ்வளவு தெரியுமா?

மேலும் பேசிய அவர், சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் பணியாற்ற விருப்பம் உள்ளதாகவும் கூறிய ஷங்கர், “எந்திரன் படத்திற்குப் பிறகு வேறு சில படங்களுக்காகவும் நான் ஷாருக் கானை ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். எதுவும் நடக்கவில்லை. ஷாருக் கானிற்கு பொருத்தமான ஸ்கிரிப்ட் வந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அவரை வைத்து படம் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் கடந்த 6 மாதமாக பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாக சூழலில், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்தியன் 2 திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏற்கனவே இந்தியன் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.