இந்தியன் என்ற டைட்டிலுக்கு கமல்சார் மட்டும் உரித்தானவர் – நடிகர் சிம்பு
இந்தியன் என்ற டைட்டிலுக்கு கமல் சார் மட்டும்தான் உரித்தானவர் என்று இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் சிம்பு, தக்லைஃப் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
கமலஹாசன் – ஷங்கர் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தியன் திரைப்படத்தில் இந்தியாவிலே லஞ்சம் அதிக அளவில் இருப்பதை தத்ருபமாக எடுத்துக்காட்டினர். இந்தியாவிலே லஞ்சம் அதிக அளவில் இருப்பதை வெளிப்படையாக காட்டியிருந்தார் இயக்குநர் ஷங்கர். மேலும் இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த கமல்ஹாசன், இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார் என்றே கூறலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இவர்களுடன் நாசர், சுகன்யா, கவுண்டமணி, மனோரமா, செந்தில் போன்ற ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர்.
Also Read: Ilayaraja: “மகளை பறிக்கொடுத்தேன்.. பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை” இளையராஜா உருக்கம்!
இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக சிம்பு கலந்துகொண்டார். இதில் கலந்து கொண்ட பேசிய நடிகர் சிம்பு, தாமதமாக வரேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க இயக்குனர் மணி சாரோட தக்லைஃப் படத்தின் ஷூட்டிங் இருந்து நேராக இங்கு வருகிறேன் அதனால் தான், தாமதமாகிவிட்டது என்று கூறினார். இந்தியன் படம் எனக்கு ரொம்ப பிடித்த படம் என்று கமல் கமல் சாரிடம் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இந்த படத்தை பலமுறை பார்த்து உள்ளேன் என்று நடிகர் சிம்பு கூறினார். ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்தும் இந்தியன் படத்தில் இருக்கிறது. தற்போது, எனக்கு கமல் சாருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை பற்றி தக் லைஃப் திரைப்ப்டத்தின் மேடைகளில் பேசுகிறேன் என்று கூறினார். மேலும் பேசிய சிம்பு, எப்போதும் மக்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதில் நடிகர்கள் கமல்ஹாசன் ஆர்வமாக இருக்கிறார், அது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறினார்.
Also Read: 12 வயது சிறுவனை கடித்து குதறிய ராட்வைலர் நாய்.. சென்னையில் மீண்டும் பயங்கரம்!
நம்ம எல்லோருக்கும் பிடித்த ஒரு கதையை தான் சங்கர் சார் எப்போதும் கொடுப்பார். பெரிய படங்கள் பன்றது மிகவும் சாதாரண விஷயம் அல்ல சங்கர் சார் தொடர்ந்து மிகப்பெரிய பிரம்மாண்டமான படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தியன் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகவும் அற்புதமானதாகவும் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் தற்போது வரை மறக்க முடியாத அளவில் ஏதோ செய்துவிட்டார் என்று கூறியிருந்தார். அந்த வகையில், இந்த படத்திற்கு இசையமைக்க யாரை அணுகு இருந்தாலும் சற்று யோசித்து இருப்பார்கள். நான் இசையமைப்பாளர் அனிருத் தைரியமாக முன் வந்திருக்கிறார். தற்போதைய காலகட்டத்தில் பேன் இந்தியா திரைப்படம் மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. ஆனால், எப்போதும் இந்தியன் என்ற டைட்டிலுக்கு உரித்தானவர் கமல் சார் மட்டும்தான், இந்தியன் என்றால் ஒற்றுமை தான் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அதைத்தான் படமும் உணர்த்துகிறது என்று நினைக்கிறேன் என்று பேசிய கமல்ஹாசன். எனது உடல் எடை பற்றி நிறைய பேர் பேசுகின்றனர். அது ஆன்மீகம் சார்ந்த விஷயம் எல்லோரும் நம்மை விட்டு ஒரு நாள் சென்று விடுவார்கள் எப்போதும் நம்முடன் இருப்பது நம்முடைய உடல் மட்டுமே அதனை பத்திரமாக வைத்துக் கொள்வது நமது கடமை. அதை நான் தாமதமாக தான் தெரிந்து கொண்டேன் என்று சிம்பு கூறினார். நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர் சிம்புவும் சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.