AR Rahman: கண்ணுக்குத் தெரியாத முடிவு.. விவாகரத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

Saira Babu: ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஆமீன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “அனைவரும் எங்களுடைய தனிப்பட்ட நேரத்திற்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்களை புரிந்துக்கொண்ட உங்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். இதையே மகள் கதீஜாவும் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

AR Rahman: கண்ணுக்குத் தெரியாத முடிவு.. விவாகரத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

கோப்பு புகைப்படம்

Updated On: 

20 Nov 2024 06:25 AM

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து: இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்த நிலையில், அதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நாங்கள் திருமண வாழ்வில் 30 வயதை எட்டுவோம் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில், உடைந்த துண்டுகளால்  மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது உங்கள் கருணைக்கும், எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்கும் எங்கள் நண்பர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு பிரிவு ரசிகர்களை மிகப்பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சாய்ரா பானு நிலை என்ன?

ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தானாக முன்வந்து விவாகரத்து செய்வதாக அறிவிக்கவில்லை. அவர் சார்பாக வழக்கறிஞரான வந்தனா ஷா என்பவர் தான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “”திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, திருமதி சாய்ரா பானு தனது கணவர் திரு. ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்வது கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட கணிசமான மன உளைச்சலுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு இருந்தபோதிலும் பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என தம்பதியினர் கண்டறிந்துள்ளனர்.

Also Read: AR Rahman Divorce: வலியுடன் இந்த முடிவை எடுத்துள்ளேன் – ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக அறிவித்த மனைவி சாய்ரா பானு..

திருமதி. சாய்ரா பானு வலியினாலும் வேதனையினாலும் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த சவாலான நேரத்தில், அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்தை வழிநடத்தும் போது, ​​பொதுமக்களிடமிருந்து அவரது தனியுரிமை மற்றும் புரிதலை உணர்ந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஆமீன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “அனைவரும் எங்களுடைய தனிப்பட்ட நேரத்திற்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்களை புரிந்துக்கொண்ட உங்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். இதையே மகள் கதீஜாவும் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம் “இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை, அது பற்றி அறிவுரை வழங்கவோ அல்லது சோகமான எமோஜிகளை இடுகையிடவோ எங்களுக்கு உரிமை இல்லை, என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது  அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Also Read: Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் நாளை முக்கிய மாவட்டங்களில் 5 மணி நேர மின் தடை.. எந்தெந்த பகுதிகளில்?

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு வாழ்க்கை

இசைப்புயல் என அனைவராலும் கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் 1992 ஆம் ஆண்டு ரோஜா படம் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு தேசிய விருது கிடைக்க பட்டித்தொட்டியெங்கும் ரஹ்மான் புகழ் பரவ தொடங்கியது. இப்படியான நிலையில் தான் தனது 29வயது வயதில் 1995  ஆம் ஆண்டு சாய்ரா பானுவை மணந்தார். இந்த தம்பதியினருக்கு கதீஜா, ரஹீமா ஆகிய இருமகள்களும் மற்றும் ஏஆர் அமீன் என்ற மகனும் உள்ளனர்.

கிட்டதட்ட 29 ஆண்டுகளாக வெற்றிகரமான தம்பதிகளாக வலம் வந்துக் கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு பிரிவு பலருக்கும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்றகாவே உள்ளது. இணையவாசிகள் பலரும் அவர்கள் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அவர்களே பொறுப்பாவார்கள். அதனால் ஆதரவாக இருக்கிறேன் என்ற பெயரின் மனதை புண்படுத்தும் கமெண்டுகளையும், பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் இட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

காதலில் பிரச்னையை உண்டாக்கும் சின்ன பொய்கள்!
நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கர்ப்பக் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க சில டிப்ஸ்..
தினசரி தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?