Rajinikanth Birthday Special: தமிழ் சினிமாவின் பிராண்ட்.. சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்து வந்த பாதை!
HBD Rajinikanth: உண்மையில் நடிப்புதான் தமிழ் சினிமாவின் உயிர் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அது மட்டுமல்ல ஸ்டைல் கூட ஒரு வகையான நடிப்புதான் என நிரூபித்து காட்டினார் ரஜினி. அதுவே சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு சொந்தக்காரராக மாற்றியது.
ரஜினிகாந்த் பிறந்தநாள்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75 வயதில் அடியெடுத்து வைக்கிறார். ரஜினிகாந்த் என்பது தமிழ் சினிமாவில் ஒரு பெயர் கிடையாது. அது ஒரு பிராண்ட், அடையாளம் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதத் தொடங்கினால் அதில் ரஜினி அத்தியாயம் இல்லாமல் கடந்து போகவே முடியாது. எத்தனையோ நடிகர்கள் நூற்றாண்டு கொண்ட தமிழ் சினிமாவில் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். விதவிதமான கேரக்டர்கள், பேர் சொல்லும் படங்கள், கடின உழைப்பு, தனித்துவமான நடிப்பு என அனைத்தும் இருந்தும் யாரும் ரஜினிக்கு ஈடாகவில்லை என்பதே உண்மை. ரஜினிக்கு பிறகு வந்த அடுத்த தலைமுறை நடிகர்கள் கூட தங்கள் படங்களில் அவரது பெயரை கொண்டு ஒரு காட்சியிலாவது நடித்திருப்பார்கள் என்பது நிதர்சனம். ரஜினி எப்படி இப்படி ஒரு ஐகானிக் நடிகராக மாறினா என பார்க்கலாம்.
Also Read: Rajinikanth: வெறிக்கொண்ட வில்லத்தனம்.. ரஜினி நெகட்டிவ் ரோலில் அசத்திய டாப் 5 படங்கள்!
பஸ் கண்டக்டர் டூ நடிகர்
1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயருடன் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலம் மைசூர் மாகாணத்தில் பிறந்தவர். மராட்டிய பின்னனி கொண்ட குடும்பத்திலிருந்து வந்த அவர் பள்ளியில் பயிலும் போது நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு முறை மகாபாரதத்தில் இருந்த ஏகலைவனின் நண்பராக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை சிறப்பாக நடித்த ரஜினியை கன்னட கவிஞர் டி.ஆர் பெந்த்ரே பாராட்டினார்.
பள்ளிக்கல்வி முடிந்த பிறகு ரஜினிகாந்த் பெங்களூரு போக்குவரத்து துறையில் கண்டக்டராக சில காலம் பணியாற்றினார். ஒரு பக்கம் அரசு பணி மறுபக்கம் நடிப்பில் ஆர்வம் என கிடைத்த வாய்ப்பை எல்லாம் நடிப்புக்காக பயன்படுத்தினார். சென்னை திரைப்படக் கல்லூரி உருவாக்கப்பட்டதை அறிந்த ரஜினி தனது நண்பர் ராஜ் பகதூர் செய்த பண உதவியை கொண்டு நடிப்பு பயிற்சி பெற்றார். இந்த காலகட்டத்தில் தான் அவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரால் கவனிக்கப்பட்டார்.
சிவாஜி ராவ் என்ற பெயரை ரஜினிகாந்த் என பாலசந்தர் மாற்றினார். காரணம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக சிவாஜிகணேசன் இருந்த நிலையில் பெயர் குழப்பத்தை தவிர்க்க அவர் இந்த மாற்றம் செய்தார். ரஜினி நடிப்பதற்க்கு ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர் முழுமையான ஆதரவு அளிக்கவே இல்லை. 1975ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரஜினி அறிமுகமானார்.
Also Read: Rajinikanth Birthday : ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரீ ரிலீஸாகும் ‘தளபதி’ திரைப்படம்..!
ரஜினி என்றாலே ஸ்டைல்
பொதுவாக சினிமா என்றாலே நல்ல நிறமாக இருப்பவர்கள் தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஒரு கருத்து இன்றளவும் நிலவி வருகிறது. ஆனால் அதனை எல்லாம் தவிடுபொடியாக்கியவர்களில் முதன்மையானவர் ரஜினிகாந்த். கருப்பு நிறம் , வித்தியாசமான உடல் மொழி, சிகரெட்டை தூக்கி போடும் ஸ்டைல், தலையை கோதி விடும் அழகு என்ன ரஜினிகாந்தை பார்த்தவுடன் அவருக்கும் பிடித்து போய்விட்டது.
ஆனால் உண்மையில் நடிப்புதான் தமிழ் சினிமாவின் உயிர் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அது மட்டுமல்ல ஸ்டைல் கூட ஒரு வகையான நடிப்புதான் என நிரூபித்து காட்டினார் ரஜினி. அதுவே சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு சொந்தக்காரராக மாற்றியது.நன்றாக கவனித்துப் பார்த்தால் ஆரம்ப காலத்தில் ரஜினி படங்களிலிருந்து ஒரு அழகான நடிப்பு, ஸ்டைல் என்ன வந்த பிறகு அவரிடம் இருந்து விலகியே இருக்கும். அதேபோல் அவருக்கு டான்ஸ் என்றால் வரவே வராது. இதையெல்லாம் தாண்டி தனக்கு என்ன வரும், என்ன தெரியும், எப்படி நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதெல்லாம் சரியாக அறிந்து அதற்கேற்ப படங்களை தேர்ந்தெடுத்து வரிசையாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நடிகராக ரஜினி பிறந்தார்.
காமெடி, ஆக்ஷன், சோகம், மாஸ் என அனைத்தையும் தனக்கான மீட்டரில் மட்டுமே வழங்கினார். பாலசந்தர் பட்டறையில் தீட்டப்பட்ட அவர் என்றைக்கும் வைரமாகவே ஜொலிப்பார். ரஜினியின் சூப்பர் படங்கள் என 172 படங்களில் சிலவற்றை மட்டுமே குறிப்பிட முடியாது. காரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவராகவும் திகழ்ந்தார். ராகவேந்திரர் மற்றும் பாபா மீது கொண்ட ஆன்மிக அன்பினால் அதுதொடர்பான படங்களில் நடித்தார். ரஜினி என்றுமே ஃபிட்னெஸ், ஆன்மிக விஷயங்களில் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வருகிறார். வயசானாலும் சிங்கம் என்றும் சிங்கம் தான் என்பதற்கேற்ப திரைஉலகை 75 வயதிலும் ஆண்டு வருகிறார். அவரின் 75 வயது மட்டுமல்ல.. வரும் ஆண்டு ரஜினி சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆக மொத்தத்தில் ரஜினிகாந்த் என்பது பெயர் அல்ல.. அது பிராண்ட்!