Samantha: நல்ல நோக்கத்தின் அடிப்படையில் சிகிச்சையை மக்களிடம் பரிந்துரைத்தேன் – நடிகை சமந்தா விளக்கம்

எனக்கு பலனளித்த சிகிச்சையை நல்ல நோக்கத்தின் அடிப்படையில்தான், நான் மக்களிடம் பரிந்துரைத்தேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.  தவறான மருத்துவ சிகிச்சையை பரிந்துரைத்ததாக சமந்தா மீது கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, நான் சமூகவலைதளத்தில் நான் பணம் ஈட்டுவதற்காக பதிவிடவில்லை என்றும், மேலும், எந்த தவறான உள்நோக்கமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு நடிகை சமந்தா விளக்கமளித்துள்ளார்.

Samantha: நல்ல நோக்கத்தின் அடிப்படையில் சிகிச்சையை மக்களிடம் பரிந்துரைத்தேன் - நடிகை சமந்தா விளக்கம்

சமந்தா

Updated On: 

16 Oct 2024 12:35 PM

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமில்லாமல் பான் இந்தியா நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், 2021ம் ஆண்டு நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை சமந்தா உடல்நலப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சிபெற்று வந்தார். தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த சமந்தா தான் சிகிச்சை எடுத்துக்கொண்ட மருந்து பற்றி இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவு பல்வேறு சர்ச்சை கருத்துகளை பெற்ற நிலையில்,  இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நான் உபயோகிக்கும் மருந்துகள், மருத்துவ வழிமுறைகளை சுயபரிசோதனை செய்த பின்பே அடுத்தவர்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்த மருத்துவ வழிமுறைகள், மருந்துகள் எல்லாம் மிக மிக விலையுயர்ந்தவை என்று தெரியும். இதையெல்லாம் என்னால் பெற முடிகிறது என்று நினைக்கும்போது நான் அதிர்ஷ்டசாலி தான் என்று கூறியுள்ளார். நிபுணர்களின் அறிவுறுத்தல்படி, என்னைப்போன்ற சாதாரண நபரால் முடிந்த அளவுக்கான சுய ஆய்வுக்குப் பின்னர் தான் அந்த மருத்துகளை எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Also Read: தர்பூசணி வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

விலை உயர்ந்த சிகிச்சைகள் மற்றும் பலனளிக்காத நீண்ட நாள் சிகிச்சைகள் ஆகிய இரண்டு காரணிகள் என்னை மாற்று சிகிச்சையை நோக்கி நகர்த்தவும், அது குறித்து படிக்கவும் வழிவகுத்தது. சில பரிசோதனைகள், தவறுக்குப் பிறகு அந்த சிகிச்சைகள் எனக்கு சிறப்பான முறையில் பலனளித்தன. வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக நான் செலவழித்ததில் ஒரு பகுதியே இந்த சிகிச்சைக்கு செலவானது. அனுபவமில்லாமல் போகிற போக்கில் நான் எந்த சிகிச்சையையும் வலுவாக பரிந்துரைக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக நான் கற்றுக்கொண்டதன் அடிப்படையிலும், நல்ல நோக்கத்துக்காகவும் தான் இதனை பரிந்துரைத்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

ஹைட்ரஜன் பெராக்சைடு எனக்கு பரிந்துரைத்த மருத்துவரும் எம்டி முடித்து 25 வருடங்களுக்கு மேலாக அனுபவம் கொண்டவர் தான். நான் தவறாக பரிந்துரைக்கிறேன். சிறைக்குச் செல்ல வேண்டும் என்று குற்றம் சாட்டிய மருத்துவரின் பதட்டத்தையும் அவரின் நல்ல நோக்கத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. என்னுடைய மருத்துவரையும் அவரையும் அமர வைத்து கலந்துரையாடல் நடத்த வேண்டும். மற்றபடி, என்னுடைய நோக்கம் அடுத்தவர்களுக்கு உதவுவதே தவிர காயப்படுத்துவது அல்ல என குறிப்பிட்டுள்ளார்.  சமந்தாவின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!