5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Video : மலையில் கார் ஓட்ட பயிற்சி.. 300 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்.. ஷாக் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலத்தில் கார் ரிவர்ஸ் கியரில் இருந்தபோது 23 வயது இளம்பெண் ஒருவர் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், மலையின் உச்சியில் இருந்து கார் பள்ளத்தில் விழுந்ததில், அந்தப் பெண் பரிதாபமாக உயரிழந்தார். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Video : மலையில் கார் ஓட்ட பயிற்சி.. 300 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்.. ஷாக் வீடியோ
உயிரிழந்த ஸ்வேதா
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 19 Jun 2024 08:49 AM

மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியில் சுலிபஞ்சன் மலை பகுதியில் நேற்று மதியம்  ஸ்வேதா எனும் அந்தப் பெண்ணுக்கு கார் ஓட்டி பழக வேண்டுமென்றும் அதனை வீடியோ எடுத்து தருமாறு தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார். அவர் முதல்முறையாக காரை ஓட்டிப் பழகியுள்ளார். அப்போது கார் ரிவர்ஸ் கியரில் இருந்துள்ளது, தொடக்கத்தில் காரை மெதுவாக நகர்த்திய அந்த பெண், திடீரென பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால், கார் மின்னல் வேகத்தில் பின்னோக்கி சீறிப்பாய்ந்து, தடுப்புகளை உடைத்து 300 அடி பள்ளத்தில் விழுந்தது அப்பளம் போல் நொறுங்கியது. இப்பகுதியில் நடந்த விபத்தில் இளம்பெண் சிக்கியிருப்பது பற்றியும் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு செல்ல மீட்பு படையினருக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

Also Read: கோலிவுட் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழில் வெளியாகும் ஆவேசம் படம்!

விபத்தில் அடிப்பட்டு காரில் இருந்த ஸ்வேதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் அந்த பெண் பள்ளத்தில் விழும் வீடியோ வேகமாக பரவிவரும் நிலையில், அந்த வீடியோவில் அப்பெண் வீடியோவை எடுக்கும் தனது நண்பரையும், வீடியோவிற்கும் மட்டும் தனது கவனத்தை செலுத்தியுள்ளார். அப்போது அவரது நண்பர், காரை நிறுத்தும்படி சொல்வதை கேட்ட அந்த பெண் பயத்தில், பிரேக் பிடிப்பதற்கு பதிலாக பயத்திலும், பதற்றத்திலும் ஆக்சிலரேட்டரை அழுத்தி விடுகிறார். இந்த காட்சிகளை நாம் காணொளியில் கேட்கலாம். காரின் வேகம் அதிகரித்து கண் இமைக்கும் நேரத்தில் பள்ளத்தாக்கில் கார் விழுந்து விபத்துக்குள்ளாகிறது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மட்டும் இல்லாமல், வீடியோவை பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஒரு வீடியோவிற்காக உயிரை விட்ட அந்த பெண் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், அப்பெண்ணை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு இதன் மூலமாக ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: Budget 2024: எதிர்பார்ப்பை கிளப்பும் மோடி 3.0-ன் முதல் பட்ஜெட்.. எப்போது தாக்கல்?

Latest News