Accident: தடையை மீறிய லாரி.. சாலையில் தூங்கியவர்கள் மீது ஏறியதில் 5 பேர் பலி!
Kerala: படுகாயம் அடைந்தவர்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை ஒட்டிய டிரைவர் ஜோஸ் கண்ணூர் மாவட்டம் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
கேரளாவில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாட்டிங்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 4.30 மணியளவில் இந்து விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 5 பேரில் ஒன்றரை மற்றும் 4 வயதுடைய 2 குழந்தைகளும் அடங்குவர் என கூறப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை ஒட்டிய டிரைவர் ஜோஸ் கண்ணூர் மாவட்டம் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர். அவருடன் கிளீனர் அலெக்ஸ் ஆகியோரும் சிக்கினார். இந்த விபத்தின் போது லாரியை அலெக்ஸ் ஓட்டி வந்ததாகவும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் அலெக்ஸிடம் சரியான ஓட்டுநர் உரிமம் கூட அவரிடம் இல்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தூங்கியவர்கள் மீது திடீரென லாரி ஏறியதால் அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர். அந்த சத்தம் கேட்டு அந்தப் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் என்னவாக இருக்கும் என பதறி அடித்துக் கொண்டு நெடுஞ்சாலை நோக்கி வந்துள்ளனர். அங்கு வந்து பார்த்தால் பலர் ரத்த காயத்துடன் சாலையில் அங்குமிங்குமாக கிடந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களும், சாலைகளின் சுவர்களில் ரத்தக்கரைகளும் இருந்ததை அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து தெரியவந்துள்ளது.
VIDEO | Kerala: At least five people were killed and several others injured when a lorry ran over people sleeping on roadside in #Thrissur. #KeralaNews
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/8XpC6qr3fd
— Press Trust of India (@PTI_News) November 26, 2024
இது தொடர்பாக காவல்துறையினருக்கும், ஆம்புலன்ஸூக்கும் பொதுமக்கள் தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் வேகமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். 11 பேர் காயம் அடைந்த நிலையில் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read: Crime: விடிய விடிய பீர்.. வேளச்சேரி இளம்பெண் மரணத்தில் ட்விஸ்ட்
உயிரிழந்தவர்கள் உடல்கள் திருச்சூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போக்குவரத்து அனுமதி மறுக்கப்பட்ட சம்பந்தப்பட்ட சாலையில் நாடோடி மக்கள் கூடாரம் அமைத்து தங்கி உள்ள நிலையில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. பாலக்காடு அருகில் உள்ள கோவிந்தபுரத்தை சேர்ந்த காளியப்பன், நாகம்மா, பங்காழி, ஜீவன், விஷ்வா ஆகியோர் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
Also Read: Udaipur: அரண்மனை வாரிசுகளுக்கு இடையே சண்டை.. ராஜஸ்தானில் பதற்றம்
கண்ணூரில் இருந்து கொச்சி நோக்கி லாரி சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. அந்த நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணி நடந்து வருவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட நிலையில் அதை உதாசீனப்படுத்தி விட்டு ஓட்டுநர் சென்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பிக்க நினைத்த நிலையில் அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்ததால் இருவரும் சிக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கல் குடும்பத்திற்கு கேரள அரசு தக்க இழப்பீடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ராஜன் இந்த கொடூரமான விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதேசமயம் கண்ணூரில் இருந்து புறப்பட்ட லாரி மாஹியில் மது வாங்க நின்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் கே.ராஜன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.