Bihar Stampede: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.. ஹத்ராஸை தொடர்ந்து பீகாரில் நடந்த கொடூரம்..
கடந்த மாதம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இதே போன்ற கூட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்தனர், ஹத்ராஸ் சம்பவத்தில் 120 க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பீகார் மாநிலத்தில் கோயில் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என மக்கள் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பீகார்: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூரில் உள்ள பாபா சித்நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தின் மக்தும்பூரில் உள்ள பாபா சித்தநாத் கோயிலில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தனர். 35 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் மக்தும்பூர் மற்றும் ஜெகநாபாத் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Bihar | “At least seven people died and nine injured in a stampede at Baba Siddhnath Temple in Makhdumpur of Jehanabad district. We are monitoring everything and now the situation is under control, ” says Jehanabad DM Alankrita Pandey to ANI
— ANI (@ANI) August 12, 2024
கடந்த மாதம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இதே போன்ற கூட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்தனர், ஹத்ராஸ் சம்பவத்தில் 120 க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பீகார் மாநிலத்தில் கோயில் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என மக்கள் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசல் குறித்த தகவல் வெளியானதும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தற்போது அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக, ஜெகனாபாத் மாவட்ட ஆட்சியர் அலங்கிரிதா பாண்டே தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை அடையாளும் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், அது முடிந்ததும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோவையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்.. சூப்பர் திட்டத்துடன் தமிழ்நாடு அரசு!
சிவன் கோயில் என்றும் முதலில் சித்தேஷ்வர் நாத் கோயில் என்றும் அழைக்கப்படும் பாபா சித்நாத் கோயில், பராபர் மலைத் தொடரின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகும். கி.பி 7 ஆம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் ராஜகிரியின் பழம்பெரும் மன்னன் ஜராசந்தாவின் மாமனாரான பாண ராஜாவுக்குக் கோயில் கட்டியதாக உள்ளூர் புராணங்கள் கூறுகின்றன.
இந்த மாவட்டம் பராபர் குகைகள் என்றும் அழைக்கப்படுகிறது. பீகார் அரசாங்கத்தின் இணையதளத்தின்படி, ஜெகனாபாத்திற்கு தெற்கே 25 கிமீ தொலைவில் உள்ள மக்தூம்பூர் அருகே மலைப்பாங்கான பகுதியில் பராபர் குகைகள் அமைந்துள்ளன.