5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IRCTC: ரயில் உணவை சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழப்பா? – நடந்தது என்ன?

மத்தியப்பிரதேசத்தில் இருந்து இயக்கப்படும் கிராண்ட் ட்ராங்க் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்பி வந்துள்ளார். வரும் வழியில் பயணத்தின் போது சாப்பிடுவதற்காக ஆன்லைன் மூலம் எலினா லாரட் சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.எலினா லாரட் மற்றும் சக மாணவிகள் அனைவரும் ரயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்கர் ஆகிய உணவுகளை சாப்பிட்டுள்ளனர்.

IRCTC: ரயில் உணவை சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழப்பா? – நடந்தது என்ன?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 19 Nov 2024 11:04 AM

பள்ளி மாணவி உயிரிழப்பு: ரயில் உணவை சாப்பிட்டு கோவையைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை உயிரிழந்ததாக வெளியான தகவலை ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கோவை மாவட்டம் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராபின் டென்னிஸ் என்பவரின் 15 வயது மகளான எலினா லாரட் என்ற 15 வயது பெண் கூடைப்பந்து வீராங்கனையாக இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரட் உடன் படிக்கும் சக மாணவிகளுடன் ரயிலில் மத்திய பிரதேசம் சென்றிருந்தார். அங்கு போட்டியில் பங்கேற்ற பின்னர் நேற்று முன்தினம் ஊருக்கு புறப்பட்டார்.

Also Read: Alisha Abdullah: மெசெஜ் மூலம் ஆபாச பேச்சு.. நடுரோட்டில் பாஜக பெண் பிரபலம் செய்த சம்பவம்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட எலினா

மத்தியப்பிரதேசத்தில் இருந்து இயக்கப்படும் கிராண்ட் ட்ராங்க் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்பி வந்துள்ளார். வரும் வழியில் பயணத்தின் போது சாப்பிடுவதற்காக ஆன்லைன் மூலம் எலினா லாரட் சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எலினா லாரட் மற்றும் சக மாணவிகள் அனைவரும் ரயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்கர் ஆகிய உணவுகளை சாப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் எலினாவுக்கு கடுமையான வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியஸிடம் விவரத்தை கூறியுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட ரயில் சென்னை வந்ததும் எலினாவை  உடனடியாக அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

சிகிச்சைக்கு பின்னர் எலினா பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. எலினா அடுத்த சில நிமிடங்களில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் பதறிப் போன உறவினர்கள் அவரை மீட்டு பெரவள்ளூரில் உள்ள  பெரியார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் எலினாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Also Read: Crime: ரூ.1 கோடி கேட்டு தாய், மகள் கடத்தல்.. சினிமா பாணியில் பிடிக்கப்பட்ட 7 பேர்!

இதனைத் தொடர்ந்து பெரவள்ளூர் போலீசாருக்கு மாணவி உயிரிழந்தது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் எலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி எலினா சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் இறப்புக்கு காரணம் உள்ளதா? என்று கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் என்ன காரணம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் மாணவி எலினா லாரட் ரயிலில் விற்கப்படும் உணவை சாப்பிட்டு உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து கிளம்பிய விரைவு ரயிலில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவி எலினா லாரட் பயணித்தார்.  அவர் சாப்பிட்டதாக கூறப்படும் சிக்கன் ரைஸ் ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி மூலம்  விநியோகம் செய்யப்படும் உணவு பட்டியலில் இல்லை.

பயணத்தின் நடுவில் மாணவிக்கு உடல் நலம் சரியில்லை என்றும், மருத்துவ உதவி கேட்டும் 139 என்ற எண்ணில் உதவிக்கு அழைத்தனர்.  மாணவி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அவரை பால்ஹர்ஷா ரயில் நிலையத்தில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார். ஆனால் எலினா லாரட் தொடர்ந்து பயணம் செய்ய முடிவெடுத்தார் என்று தெரிவித்துள்ளது

Latest News