5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: ஜீன்ஸ் பேண்டை தைத்த வீடியோ வைரல்.. தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!

பெல்தங்கடி டவுனுக்கு வந்த சாகில்  சந்தக்கட்டே என்ற மார்க்கெட்டு பகுதிக்குள் சென்றுள்ளார். அங்கு அவர் மார்க்கெட்டில் தனக்கு தேவையான பொருட்களை அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்து வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாயிலா கிராமம் புத்ரபைலு பகுதியைச் சேர்ந்த சபீர், அனிஷ் பனகேஜி, பாப் ஜான் சாகிப் ஆகிய 3 பேர் சாகிலை வழிமறித்து பேசியுள்ளனர்.

Crime: ஜீன்ஸ் பேண்டை தைத்த வீடியோ வைரல்.. தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!
சாகுல் ஜீன்ஸ் பேண்ட் தைக்கப்பட்ட காட்சி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 24 Nov 2024 10:10 AM

பெங்களூருவில் தன்னுடைய கிழிந்த நிலை பேண்டை ஒருவர் ஊசியால் தைத்த வீடியோ வைரலானதால் இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடி தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷாகிப். இவர் தனது மனைவி மற்றும் மகன் சாகிலுடன் பனகேஜி பகுதியில் வசித்து வருகிறார். இதனிடையே 21 வயதான ஷாகில் நேற்று முன்தினம் பெல்தங்கடி டவுன் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது சாகில் வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். அவர் தற்போது விற்பனையில் இருக்கும் பிரபலமான கிழிந்த நிலை ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். அந்த கிழிந்த பகுதிகளில் சல்லடை வைத்தாற் போல நூல்கள் வைத்து ஆடை பின்னப்பட்டிருக்கும்.

Also Read: Maharastra: நோட்டாவை விட குறைவான ஓட்டு.. பிக்பாஸ் பிரபலத்துக்கு நேர்ந்த சோதனை!

மார்க்கெட்டில் நடந்த சம்பவம்

பெல்தங்கடி டவுனுக்கு வந்த சாகில்  சந்தக்கட்டே என்ற மார்க்கெட்டு பகுதிக்குள் சென்றுள்ளார். அங்கு அவர் மார்க்கெட்டில் தனக்கு தேவையான பொருட்களை அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்து வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாயிலா கிராமம் புத்ரபைலு பகுதியைச் சேர்ந்த சபீர், அனிஷ் பனகேஜி, பாப் ஜான் சாகிப் ஆகிய 3 பேர் சாகிலை வழிமறித்து பேசியுள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த அந்த கிழிந்த நிலை ஜீன்ஸ் பேண்டை பார்த்து இது போன்ற ஆடைகளை அணிந்து இங்கு வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் சாகிப்புக்கும், சபீர் உள்ளிட்ட 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு  ஏற்பட்டது.  இதில் ஆத்திரமடைந்த அந்த மூன்று பேரும் சாகிலை வசமாக பிடித்து வைத்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஒரு கடையில் கோணி ஊசி மற்றும் சணல் வாங்கி வந்துள்ளனர். சாகிலை பின்னால் இருந்து இரு கைகளை வளைத்து பிடித்தபடி ஒருவன் பிடித்துக் கொண்டான்.  இன்னொருவர் கோணி ஊசி மற்றும் சணலை கோர்த்து ஜீன்ஸ் பண்ட் கிழிந்த பகுதிகளை எல்லாம் தைத்துள்ளான்.

இந்த நிகழ்வை இன்னொருவன் தனது செல்போன் வீடியோ எடுத்தார். பேண்டை நன்றாக சணல் கொண்டு தைத்த நிலையில் சாகிலை அவர்கள் விடுவித்தனர். இதற்கிடையில் சாகில் பேண்ட்டை தைக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. தன்னுடைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சாகுல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனிடையே  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

Also Read:Maharastra: தேர்தல் வெற்றி.. கொண்டாட சென்ற மகாராஷ்ட்ரா தேர்தல் வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்!

தீவிர சிகிச்சை

வீட்டில் மயங்கி கிடந்த அவரை, எதேச்சையாக வீட்டிற்குள் வந்த கார் டிரைவர் பார்த்து எழுப்ப முயன்றுள்ளார். பேச்சு மூச்சின்றி இருந்த சாகில் பற்றி பெற்றொருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த சாகிலின் பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது சாகில் மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சாகிலுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து சாகில் தரப்பில் இதுவரை போலீஸில் புகார் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தற்கொலை சம்பவம் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் அதனை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற போர்வையில் சிலர் எடுக்கும் விபரீதமான முடிவுகள் பலருக்கும் பிரச்சனையை உண்டாக்குகிறது. பிராங்க் என்ற பெயரில் மற்றவர்களை சீண்டுவது, அதிக லைக்ஸ்  பெறவேண்டி ஆபத்தான செயலில் ஈடுபடுவது, மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக சாலையில் செல்வோர்களை துன்பப்படுத்துவது என பல விபரீத காரியங்களை ஈடுபடுகின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

Latest News