Mumbai Attack: எச்சரித்த மீனவர்கள்.. அதிர்ந்த இந்தியா.. மும்பை தாக்குதல் நடந்தது எப்படி? ரீவைண்ட்!
Mumbai Terrorists Attack: முன்னதாக 2 மீனவர்கள் படகுகளில் சந்தேகத்திற்குரியவர்கள் வருகிறார்கள் என காவல்துறையினருக்கு தெரிவித்த நிலையில் அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவே இத்தகைய தாக்குதலுக்கு காரணமாக சொல்லப்பட்டது.
மும்பை தாக்குதல்:வரலாற்றில் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதியை இந்திய மக்களால் என்றைக்கும் மறக்க முடியாது. காரணம் 2008 ஆம் ஆண்டு இதே நாளில் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்போது நினைத்தாலும் உடல் ஒரு கணம் சிலிர்த்திடும் அளவுக்கு அதன் காட்சிகள் கண் முன் வந்து செல்லும். எத்தனையோ தீவிரவாத தாக்குதல் இந்தியாவில் நடந்திருந்தாலும் இது முற்றிலும் மாறுபட்டு இருந்தது. இன்றைய தலைமுறையினருக்கு இந்த சம்பவம் மறக்க முடியாத அடையாளமாக மாறிவிட்டது.
Also Read: ஷிண்டே ராஜினாமா.. மகாராஷ்ராவின் அடுத்த முதல்வராகும் பட்னாவிஸ்?
படகுகளில் வந்த தீவிரவாதியினர்
பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத குழுவான லஷ்கர் – இ- தொய்பாவைச் சேர்ந்த 10 பேர் மும்பைக்கு அருகில் உள்ள கராச்சி துறைமுகத்திலிருந்து படகுகளில் சாட்டிலைட் போன்களுடன் வந்து சேர்ந்தனர். அன்று இரவு 9 மணி அளவில் மும்பைக்கு வந்த தீவிரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் ஓபராய் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஓபராய் ஹோட்டல் என பல இடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னதாக 2 மீனவர்கள் படகுகளில் சந்தேகத்திற்குரியவர்கள் வருகிறார்கள் என காவல்துறையினருக்கு தெரிவித்த நிலையில் அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவே இத்தகைய தாக்குதலுக்கு காரணமாக சொல்லப்பட்டது.
நன்கு பயிற்சி பெற்ற அந்த 10 பேர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் நோக்கில் வந்த நிலையில் நவீன ரக துப்பாக்கிகளுடன் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு எல்லாம் சென்று கண்ணில் காண்பவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டுத்தள்ளினர். இந்த தாக்குதலில் 19 பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Humble tributes to the brave soldiers and the innocent lives lost during the 26/11 Mumbai attacks. This day serves as a poignant reminder of the courage displayed by our security forces and the resilience of our nation in the face of terror. This spirit of unity continues to… pic.twitter.com/EWJfmA8hJK
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 26, 2024
கடல் வழியாக மும்பைக்குள் வர முயன்ற நிலையில் இந்திய கடற்படை வீரர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் தீவிரவாதிகள் அந்த படகை கடத்தி அதிலிருந்து அனைவரையும் கொலை செய்தனர். கொலாபா மீன் மார்க்கெட் அருகே இறங்கிய அவர்கள் டாக்ஸிகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். இதில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திய 2 பேரில் ஒருவரான அஜ்மல் கசாப் பாதுகாப்பு படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டார்.
அவர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மூன்று நாட்கள் சண்டை நடத்த நிலையில் கிட்டத்தட்ட 60 மணி நேரம் சண்டை நீடித்தது. இந்த தாக்குதலை இந்திய ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்தது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் முதலில் சண்டையிட்ட நிலையில் நிலைமை மோசமானது. இதனைத் தொடர்ந்து என்.ஜி.ஓ கமாண்டோக்கள் வரவழைக்கப்பட்டனர்.
Also Read:Accident: தடையை மீறிய லாரி.. சாலையில் தூங்கியவர்கள் மீது ஏறியதில் 5 பேர் பலி!
உலக நாடுகள் அனைத்தும் இந்த தாக்குதலை உற்று நோக்கிக் கொண்டிருந்தது. இந்த தாக்குதலில் வெளிநாடுகளை சேர்ந்த 25 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில், மகாராஷ்டிரா முதலமைச்சர் விலாஸ்ராவ் தேவ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். லஸ்கர் இ இ தைபா தீவிரவாதிகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் தீவிரவாத தடுப்பு படை என்று பிரிவு அமைக்கப்பட்டது. தற்போது வரை மும்பை முழுவதும் தொடர் கண்காணிப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் மக்களின் பாதுகாப்புக்காக அன்று உயிரை துச்சமென எண்ணி தீவிரவாதிகளை கொன்ற நம் வீரர்களுக்கு இன்றைய நாளில் வீர வணக்கம் செலுத்துவோம்!