Telangana: லாக்கரை உடைத்து வங்கியில் ரூ.10 கோடி நகை கொள்ளை.. நடந்தது என்ன?

Bank Robbery: வழக்கம்போல வங்கியை திறக்கச் சென்ற கிளை அதிகாரிகள் கொள்ளை நடந்தததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ராயபர்த்தி காவல்துறையினரிடமும் புகாரளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

Telangana: லாக்கரை உடைத்து வங்கியில் ரூ.10 கோடி நகை கொள்ளை.. நடந்தது என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

20 Nov 2024 10:55 AM

தெலங்கானா மாநிலத்தில் எஸ்பிஐ வங்கியின் லாக்கர்களை உடைத்து ரூ.10 கோடி மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள வாரங்கல் பகுதியில் ராயபர்த்தி மண்டல் பகுதியில் எஸ்பிஐ வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் செயல்படும் முக்கிய கிளை என்பதால் ஏராளமான மக்கள் தங்கள் நகைகளை வங்கியில் உள்ள லாக்கரில் பாதுகாப்புக்காக வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அடகு வைக்கப்பட்ட நகைகளும் லாக்கரி வைக்கப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் நேற்று முன்தினம் இரவு வங்கிக்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

Also Read: Crime: வாட்ஸ்அப் குழுவில் வந்த தகவல்.. மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவன்!

அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

நேற்று வழக்கம்போல வங்கியை திறக்கச் சென்ற கிளை அதிகாரிகள் கொள்ளை நடந்தததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ராயபர்த்தி காவல்துறையினரிடமும் புகாரளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.திருடப்பட்ட மொத்த நகைகளின் மதிப்பு ரூ.10 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வங்கியில் நகைகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ராயபர்த்தி மண்டல் கிளைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். யாருடைய நகைகள் எல்லாம் திருடப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் கணக்கிடப்பட்டு வருகிறது.இப்படியான நிலையில் ராயபர்த்தி உதவி காவல் ஆய்வாளர் கே.ஷ்ரவன் கொள்ளை சம்பவம் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், வங்கியின் ஜன்னலை கேஸ் கட்டர் மூலம் அறுத்து உள்ளே நுழைந்த திருடர்கள் லாக்கர்களை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Also Read: Crime: கொள்ளை பணத்தில் நூற்பாலை வாங்கி சொகுசு வாழ்க்கை.. குடும்பத்துடன் சிக்கிய கும்பல்!

அவர்கள் வங்கியின் சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தினர்” என தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தங்களை அடையாளம் காண முடியாதபடி டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை அகற்றி சென்றுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை வழக்கம்போல வங்கி நேரத்திற்கு வந்த அதிகாரிகள் வங்கியின் கதவு திறந்து கிடந்ததையும், லாக்கர்கள் உடைக்கப்பட்டதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது” என கே.ஷ்ரவன் தெரிவித்தார்.

உள்ளூர் கும்பல் இல்லை

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கி மேலாளர் போலீசில் புகார் செய்துள்ளார். வங்கியில் நகைகளை திருடிய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில், இது இரு மாநிலங்களுக்கு இடையே வசித்து வரும்  கொள்ளைக் கும்பலின் கைவரிசையாகத் தெரிகிறது என்று உதவி காவல் ஆய்வாளர் ஷ்ரவன் கூறினார்.

முழு நடவடிக்கையும் செயல்படுத்தப்பட்ட விதம் இது ஒரு தொழில்முறை கும்பலின் வேலையாகத் தோன்றுகிறது. கண்டிப்பாக உள்ளூர் கும்பல்களுக்கு அத்தகைய நிபுணத்துவம் இல்லை எனவும் அவர் கணித்துள்ளார். வங்கி கொள்ளை தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் பலர், வங்கி முன்பு திரண்டு தங்கள் கவலையை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். இதற்கிடையில், வங்கி அதிகாரிகள் நஷ்டத்தை மதிப்பிடுவதற்கான தணிக்கைப் பணியைத் தொடங்கியுள்ளனர். காணாமல் போன நகைகள் குறித்த புகாரை வங்கி மேலாளர் இன்று போலீசில் சமர்பிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் வெற்றிக்கு தாய் செய்ய வேண்டிய விஷயங்கள்!
நடிகை ஷாலினி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மது அருந்துபவரா நீங்கள்? அப்போ இந்த வகை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது..
தூக்கமின்மை இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா? எந்த விதத்தில்?