5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: வாட்ஸ்அப் குழுவில் வந்த தகவல்.. மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவன்!

பொதுவாக வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பது என்பது மிகவும் ஆபத்தான செயலாகும். பிரசவ வலி ஏற்பட்டாலோ அல்லது கர்ப்ப காலத்தில் ஏதேனும் உடல்நலம் பாதிப்புகள் ஏற்பட்டாலோ அதற்கு வீட்டில் வைத்து வைத்தியம் பார்க்காமல் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

Crime: வாட்ஸ்அப் குழுவில் வந்த தகவல்.. மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவன்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 Nov 2024 08:57 AM

வீட்டில் பிரசவம்: சென்னை குன்றத்தூர் அருகே மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த கணவனை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை பகுதியில் சேர்ந்த மனோகரன். இவர் தற்போது  குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.  மனோகரன் குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் இருக்கும் தேவி கருமாரியம்மன் தெருவில் தனது மனைவி சுகன்யாவுடன்  வசித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே கோபிகா மற்றும் தாரணி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மனோகரன் அப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் ஓட்டுநராக இருந்து வருகிறார்.

Also Read: Train Service: பராமரப்பு பணி.. சென்னை – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

வீட்டில் வைத்து பிரசவம்

இதனிடையே மனோகரன் தனக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற சோகத்தில் இருந்த நிலையில் 3வது முறையாக சுகன்யா சமீபத்தில் கர்ப்பம் தரித்துள்ளார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று திடீரென சுகன்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக வீட்டில் இருந்த கணவன் மனோகரன் சுகன்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மரபு வழிமுறையில் வீட்டில் வைத்து தனது மனைவி சுகன்யாவுக்கு மனோகரன் பிரசவமும் பார்த்துள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3வதாக ஆண் குழந்தை பிறந்ததால் இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்த மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. காரணம் சுகன்யாவுக்கு மனோகரன் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த தகவல் அப்பகுதியில் மிக வேகமாக பரவியது. உடனடியாக அப்பகுதியில் உள்ள சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனோகரன் வீட்டுக்கு உடனடியாக வந்தனர். அங்கு குழந்தை பெற்றெடுத்த சுகன்யா மற்றும் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read:  பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகள்.. 18 பேரின் தலைமுடியை வெட்டிய பள்ளி முதல்வர்..

“வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்”

இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் மனோகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் மனோகரனிடம் தீவிரமாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர் அளித்த தகவல் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது.

அதாவது, முதலில் மனைவி சுகன்யாவுக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கும் எண்ணத்தில் மனோகரன் இல்லாமல் இருந்துள்ளார்.  ஆனால் அவர் உறுப்பினராக இருந்த வாட்ஸ்அப் குரூப்பில் “வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்” என்ற பெயரில் வந்த தகவலை படித்து பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக அந்தக் குழுவில் வந்த தகவல்களால் ஈர்க்கப்பட்ட மனோகரன் வீட்டில் வைத்து சுகன்யாவுக்கு பிரசவம் பார்க்கும் முடிவுக்கு வந்துள்ளார். இதற்காக பல்வேறு விஷயங்களையும் இணையத்தின் மூலம் தெரிந்து வைத்துள்ளார். அந்த  வாட்ஸ்அப் குரூப்பில்  மொத்தம் 1024 பேர் உறுப்பினராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பின் அட்மினை தொடர்பு கொண்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் எச்சரிக்கை

பொதுவாக வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பது என்பது மிகவும் ஆபத்தான செயலாகும். பிரசவ வலி ஏற்பட்டாலோ அல்லது கர்ப்ப காலத்தில் ஏதேனும் உடல்நலம் பாதிப்புகள் ஏற்பட்டாலோ அதற்கு வீட்டில் வைத்து வைத்தியம் பார்க்காமல் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு நீங்கள் ஆவலுடன் இத்தனை மாதங்கள் எதிர்நோக்கி காத்திருந்த குழந்தைக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். மத்திய மாநில அரசும் வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க கூடாது என அறிவுறுத்தி வரும் நிலையில் தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்ட பிறகு சமீப காலமாக இது போன்ற குற்றங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

Latest News