Cooperative Sector: 2030க்குள் 11 கோடி வேலை வாய்ப்புகள்.. அள்ளிக்கொடுக்கும் கூட்டுறவு துறை!
இந்தியாவைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பில் கூட்டுறவுத் துறையின் பங்கு பல ஆண்டுகளாக சீராக வளர்ந்து வருகிறது. 2007-08ல் வெறும் 12 லட்சம் வேலைகளை உருவாக்கியதாக இருந்தது. அதுவே அடுத்த 10 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
வேலை வாய்ப்பு: இந்தியாவின் கூட்டுறவுத் துறையானது 2030ஆம் ஆண்டுக்குள் 5.5 கோடி நேரடி வேலை வாய்ப்புகளையும் 5.6 கோடி சுயவேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்று Primus Partners தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இயக்குவதில் கூட்டுறவுத் துறையின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டியுள்ள அந்நிறுவனம் உலகளவில் உள்ள 30 லட்சம் கூட்டுறவு சங்கங்களில் கிட்டத்தட்ட 30 சதவிகிதத்தை இந்தியா பிரதிநிதித்துவப்படுத்துகிறது என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் கூட்டுறவு வலையமைப்பு உலகிலேயே மிகப்பெரியது எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொருளாதார இலக்கை நோக்கி இந்தியா
வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் நோக்கில் அதன் லட்சிய இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், கூட்டுறவுத் துறை நம்பிக்கை மற்றும் ஆற்றலின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.மேலும் உலகளவில் மிகப்பெரிய கூட்டுறவு நெட்வொர்க்குகளில் ஒன்றான இந்தியா , பொருளாதார வளர்ச்சி, சமூக சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய மேம்பாடு கொண்டு இத்துறையின் மகத்தான திறன்களைப் பயன்படுத்த தயாராக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பில் கூட்டுறவுத் துறையின் பங்கு பல ஆண்டுகளாக சீராக வளர்ந்து வருகிறது. 2007-08ல் வெறும் 12 லட்சம் வேலைகளை உருவாக்கியதாக இருந்தது. அதுவே அடுத்த 10 ஆண்டுகளில் 2016-17க்குள் 58 லட்சம் வேலைகளை உருவாக்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் 18.9% கூட்டுறவுத் துறை குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
Also Read: டி.என்.பி.எஸ்.சி ரோடு இன்ஸ்பெக்டர் தேர்வு.. ரிசல்ட்-ஐ ஆன்லைனில் செக் பண்ணுங்க!
கைகொடுக்கும் கூட்டுறவு துறை
இந்த வளர்ச்சி இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு ஆகிய இரண்டையும் நிவர்த்தி செய்வதற்கான அதன் திறனை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. சுயவேலை வாய்ப்புகளில் நிலையான 5-6% வளர்ச்சியுடன், இந்தத் துறையானது 2030க்குள் 5.6 கோடி சுயதொழில் செய்பவர்களை ஆதரிக்க முடியும் என்று Primus Partners மதிப்பிட்டுள்ளது.
இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடியாக 3-5% பங்களிப்பையும், வேலைவாய்ப்பு பாதிப்புகளை உள்ளடக்கிய போது 10%க்கும் அதிகமாகவும் பங்களிக்க முடியும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் கூட்டுறவு அமைச்சகம் நிறுவப்பட்டது இந்தத் துறையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
கூட்டுறவு சுற்றுச்சூழல் அமைப்பை நவீனமயமாக்குதல், கொள்கைகளை நெறிப்படுத்துதல் மற்றும் கூட்டுறவுகளை தன்னிறைவானதாக மாற்றுவதற்கு நிதியளிப்பு ஆகிய சவால்களை எதிர்கொள்வதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தியாவில் சுமார் 8.5 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 29 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
Also Read: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000.. உடனே அப்ளை பண்ணுங்க.. அரசு வெளியிட்ட அறிவிப்பு!
சுயவேலை வாய்ப்புகளே இலக்கு
இப்படியான நிலையில் சுயாட்சி, தன்னம்பிக்கை மற்றும் ஜனநாயக மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் இலக்கை நனவாக்குவதில் கூட்டுறவு நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க தயாராகவே உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும் Primus Partners அறிக்கை பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக சமத்துவத்தின் சமநிலையான கலவையை கூட்டுறவு துறையால் எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டுறவு அமைப்புகள் இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல. அவை முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு எரியூட்டும் சக்திவாய்ந்த இயந்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுயவேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கூட்டுறவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.