Dates Medical Benefits: இரும்புச்சத்து முதல் முடி உதிர்வு வரை தீர்வளிக்கும் பேரீச்சம் பழத்தின் நன்மைகள்..! - Tamil News | Benefits of dates from iron to hair loss..! | TV9 Tamil

Dates Medical Benefits: இரும்புச்சத்து முதல் முடி உதிர்வு வரை தீர்வளிக்கும் பேரீச்சம் பழத்தின் நன்மைகள்..!

பேரிச்சம் பழத்தில் உடலுக்கு நன்மையளிக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமில்லாமல் நோய்களிலிருந்தும் காக்கிறது. பேரிச்சம் பழத்தில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, ப்ரோடீன், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி-6 ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

Dates Medical Benefits: இரும்புச்சத்து முதல் முடி உதிர்வு வரை தீர்வளிக்கும் பேரீச்சம் பழத்தின் நன்மைகள்..!

பேரீச்சம் பழம்

Updated On: 

06 Jul 2024 07:17 AM

தற்போதைய காலக்கட்டத்தில், நமது அன்றாட உணவுகளில் இரண்டு பேரீட்சை பழம் எடுத்து கொள்வது நன்மையளிப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரும்புச்சத்தை அதிகரிப்பது முதல் இரத்த உற்பத்தியைத் தூண்டுவது வரை பேரீச்சம் பழம் பல அத்தியாவசிய நன்மைகளை வழங்குகிறது. பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது, பேரீட்சை அன்றாடம் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கிறது.

Also Read: மாதம் மாதம் சரியாக EMI செலுத்தியும் கிரெடிட் ஸ்கோர் குறைகிறதா? கட்டாயம் இத பண்ணுங்க!

  • வெயில் காலங்களை விட குளிர், காலங்களில் நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகிறது. அந்த வகையில், ஆரோக்கிய உணவுகளை குளிர் காலத்தில் எடுத்து கொண்டால் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்  வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நாம் அன்றாடம் சேர்க்கவேண்டும். பேரீச்சம் பழத்தில் நம் உடலை பாதுகாக்கும் அனைத்து உணவுகளும் இருப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. பேரீட்சை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
  • பேரீச்சை பழம் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகின்றன, சிறந்த செரிமானத்திற்கு உதவுகின்றன, மேலும் ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டுக்குத் தேவையான ஆற்றலை தருகின்றன.

Also Read: வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

  • ஒரு நாளைக்கு ஐந்து பேரீச்சம்பழங்களுக்கு மேல் உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் பேரீச்சம்பழத்தில் அதிக இயற்கை சர்க்கரை மற்றும் கலோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • வைட்டமின் டி சக்தியை அதிகரிக்கும் பேரீச்சம் பழம் எலும்புகளுக்கு வலு சேர்க்க உதவுகிறது. எலும்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் பேரீச்சை பழத்தில், பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். இதில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவுகிறது.
  • மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ள குளிர் காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. தினமும் பேரீட்சை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு புத்துணர்சி அளிக்கிறது.
  •  இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. இதன் மூலம் உடலில் பலவிதமான ஆரோக்கியம் பெரிதளவில் மாற்றம் அடைந்து காணப்படுகிறது.  முடி கொட்டும் பிரச்சனை, குறைந்த எதிர்ப்பு சக்தி,  போன்ற பாதிப்புகள் இரத்த சோகையினால் ஏற்படுகிறது. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பேரீச்சம் பழம் பெரிதும் உதவும். அன்றாடம் பேரீச்சை சாப்பிட்டு வருவதால் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்களின் கரு வளர்ச்சிக்கு உதவுகிறது.
நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!