5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Earbuds: இயர்பட் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்னையா..? WHO அதிர்ச்சி தகவல்..!

செல்போன்கள் இல்லாத மனிதரை பார்ப்பதை அரிதாக உள்ளது. அதிலும் செல்போனை கையில் வைத்துக் கொண்டு காதில் ஏற்பட்ஸ்கள் ஹெட்போன்கள் அணிந்து கொண்டு பாடல்கள் கேட்பது, போன் பேசுவது என்று சுமார் 65 சதவீதம் பெயர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். காதில் அதிகபட்சமாக 85 ஸ்பெஷல் சத்தங்களை கேட்பதனால் காதுகளில் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

Earbuds: இயர்பட் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்னையா..? WHO அதிர்ச்சி தகவல்..!
இயர்பட்
intern
Tamil TV9 | Updated On: 19 Jun 2024 20:53 PM

சந்தைகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏற்பட்ஸ்கள் ஹெட்போன்கள் போன்றவற்றின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. இவ்வாறு ஹெட்ஃபோன்கள் மற்றும் ஏற்படசுகள் பயன்படுத்துவதனால் 12 வயதிலிருந்து 30 வயது குட்பட்ட ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அதிகபட்ச இரைச்சல் காரணமாக கேட்கும் தன்மைகள் இழந்து வருகின்றனர். அதாவது இசை மற்றும் பொழுதுபோக்குக்காக பாடல்களை காதின் வழியாக கேட்கும் அவர்களுக்கு காது கேளாமை ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Also Read: Sleep : இரவில் லேட்டா தூங்குற ஆளா நீங்க.. உஷார்.. ஆய்வு சொன்ன அதிர்ச்சி தகவல்கள்!

உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி 2050 ஆம் ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒருவருக்கு காது கேட்காமல் போகலாம் என்று கூறப்படுகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயரும் என்றும் கூறுகின்றனர். பாடல்கள் கேட்பது பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்களுக்காக இயர் போன்களை பயன்படுத்துபவர்களில் 65 சதவீதம் பேர் 85 டெசிபல் சத்தத்தில் கேட்பதாகவும் எதனால் அவர்களுக்கு காது கேட்காமல் போகலாம் என்றும் கூறுகின்றனர்.

காது கேளாத பிரச்சனைகளை தடுக்க பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அதில் முக்கியமானது உங்களது செல்போன்களில் உள்ள ஒளியின் அளவை 60% க்கும் குறைவாக கேட்க அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் ஆன்லைன் கேமிற்காக ஹெட்போன்களை பயன்படுத்துகின்றனர். இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவசியம் வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Also Read: விஜய் சினிமாவை விட்டு விலகுவது குறித்து கஸ்தூரி ஓபன் டாக்

தொடர்ந்து ஒரு செயலை செய்யும் போது அதைப்பற்றி திரும்ப திரும்ப சொல்லும்படி கேட்பது, ஒருவருடன் உரையாடும் பொழுது தொலைபேசியில் பேசும்பொழுது சத்தம் இல்லாத சூழலை உணர்வது மற்றும் காதுக்குள் எது ஒரு விதமான அழுத்தம் மற்றும் திரவம் போன்ற சுரப்பதை உணர்வது. தலைவலி, தலைச்சுற்றல் போன்றவை காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அறிகுறிகளாக உள்ளன.

Latest News