5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sleep : இரவில் லேட்டா தூங்குற ஆளா நீங்க.. உஷார்.. ஆய்வு சொன்ன அதிர்ச்சி தகவல்கள்!

தற்போதைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முறையான தூக்கத்தை பின்பற்றுவது இல்லை. இரவு ஒரு மணிக்கு மேல் தூங்குவதை சிலர் வாடிக்கையாகவே வைத்துள்ளனர். வளர்ந்து வரும் நவீன உலகத்தில் இரவுநேர பணி என்பதும் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தற்போது காணலாம்.

Sleep : இரவில் லேட்டா தூங்குற ஆளா நீங்க.. உஷார்.. ஆய்வு சொன்ன அதிர்ச்சி தகவல்கள்!
மாதிரி புகைப்படம்
intern
Tamil TV9 | Updated On: 19 Jun 2024 17:11 PM

தினமும் இரவு ஒரு மணிக்கு மேல் உறங்குபவர்களுக்கு சமீபத்தில் ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் போன்று வெளியாகி உள்ளது. இரவு ஒரு மணிக்கு மேல் தினமும் உறங்குவதினால் வனச் சோர்வு அதிகமாகி மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் கூறியுள்ளனர். சமீபத்திய ஆய்வு ஒன்று நடத்தப்பட்ட சோதனையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரவில் ஆந்தையைப் போல உறங்காமல் இருப்பவர்களுக்கு மனநல பிரச்சினைகள் ஆரம்பித்து உடல் உபாதைகள் நிறைய ஏற்பட்டுள்ளது. 20% முதல் 40 சதவீதம் வரை உள்ள மக்களுக்கு இதை கண்டறிந்துள்ளனர். இரவில் நேரம் சென்று உறங்குபவர்கள் காலை குறித்த நேரத்தில் எழுவது இல்லை. ஆதலால், அவர்களுடைய மூளை சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 7 முதல் 9 மணி நேரம் உறங்குவது மனித உடலுக்கு அவசியமானதாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றன. இரவில் நேரம் சென்ற பின்னர் தூங்குவது உடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.

Also Read: விஜய் சினிமாவை விட்டு விலகுவது குறித்து கஸ்தூரி ஓபன் டாக்

தாமதமாக தினமும் உறங்குவதால் கார்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரித்து மன அழுத்தத்தை உருவாக்குகிறது. தூக்குமின்மையால் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல் திறன் மிகவும் பலவீனமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பல்வேறு விதமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

முறையற்ற தூக்கத்தினால் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை காணலாம் எடை அதிகரிப்பு இன்சுலின் எதிர்ப்பு வளர்ச்சிதை மாற்றம் போன்ற நோய்களுக்கு இவை வழி வகுக்கிறது. இரவு நேரத்தில் நீண்ட நேரம் உறங்காமல் இருப்பதினால் ஒரு செயலில் கவனம் செலுத்துவது மாறுபடுகிறது. நினைவில் வைக்கக்கூடிய முக்கியமான விஷயங்களை மறந்து நமது மூளை விடுகிறது. பலரும் இரவு தூக்கம் வரவில்லை என்றால் புலம்புவதையும் நாம் பார்த்திருப்போம் அப்படி உள்ளவர்கள் முறையான உடற்பயிற்சியையும், உணவுகளையும் பின்பற்றுவதன் மூலம் முறையான தூக்கத்தை பெறலாம் இரவு ஒரு மணிக்கு முன்னரே தோங்கி எழுவது மிகவும் பயனுள்ளதாகவும் நோய்களை எதிர்த்து போராடி வாழவும் உதவுகிறது.  இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு சீரான தூக்கம் அவசியம் என்பதை உணர்ந்து இரவில் தூங்குவதை கடைபிடிக்க வேண்டும் என்ற மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

Also Read: Sirish Bharadwaj: சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் திடீர் மரணம்!

Latest News