5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Body Pain: நாள்பட்ட உடல் வலிகளுக்கு இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!

உடலில் ஏற்படும் நாள்பட்ட வலிகளுக்கு விரைவான நிவாரணம் பெற ஆரோக்கியமான உணவு தூக்கம் உடற்பயிற்சி ஆகியவற்றை தினசரி வாழ்க்கைகள் நடைமுறைப்படுத்திக் கொண்டால் அவை காலப்போக்கில் மாறிவிடும். வயதானவர்களுக்கு ஏற்படும் இது போன்ற சில பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகளை காணலாம்.

Body Pain: நாள்பட்ட உடல் வலிகளுக்கு இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!
உடல்வலி
intern
Tamil TV9 | Updated On: 19 Jun 2024 11:22 AM

சாதாரண ஒரு மனிதனுக்கு உடலில் நாள்பட்ட வலி இருந்தால் அதனை வீட்டிலிருந்தே சரி செய்யும் வழிமுறைகள் ஏராளமாக உள்ளன அவற்றில் முதன்மையாக உள்ளது நமது உணவு பழக்கங்கள். இன்றைய காலகட்டத்தில் யாரும் சரியான உணவு பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில்லை. ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் நல்ல மாற்றங்களை பெறலாம். பழங்கள் காய்கறிகள் முழு தானியங்கள் புரதங்கள் நிறைந்த உணவுகள் ஆகியவற்றை சீரான அளவில் தினமும் உடலில் சேர்த்துக் கொள்வது அவசியம். உடலில் ஏற்படும் நாள்பட்ட வழிகள் சில வாரங்கள் மாதங்கள் வருடங்கள் கூட நீடித்து வருகின்றன இதன் காரணமாக மூட்டு வலி நரம்பு சேதம் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுகிறது கடுமையான வலிகளை ஏற்படுத்தும் இது போன்ற பிரச்சனைகளை காயத்திற்கான எச்சரிக்கையாகவும் உள்ளது. இதனால் உடலில் பல்வேறு மாற்றங்களும் மன உளைச்சலும் ஏற்படுகிறது.

நீங்கள் அன்றாடம் செய்யும் பணிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் வலி ஏற்படுவதை உணர்ந்து அதை நிறுத்தி இருப்பீர்கள் ஆனால், உடல் இயக்கத்தை பராமரிக்க நடை பயிற்சி நீச்சல் போன்றவற்றை செய்வது உடலுக்கு நன்மை அளிக்கிறது. அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிக்கு சிறந்த தீர்வாக அமையும்.

Also Read: 40 வயதுக்கு மேல் கர்ப்பம் சாத்தியமா? ஆரோக்கியத்தில் கவனிக்க வேண்டியவை என்ன?

பழங்கள் காய்கறிகள் மருதாணியங்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். உடலை நீர் ஏற்றத்துடன் வைத்துக் கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து இயற்கையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக வெள்ளைச்சர்க்கரை பயன்படுத்துவதை அறவே நீக்க வேண்டும்.

லேசான வழி இருக்கும் பொழுது அசெட்டமினோஃபென் மற்றும் NSAID போன்ற வலி நிவாரணிகளை பயன்படுத்தலாம். மிகவும் கடுமையான வலிக்கு மருத்துவர்களால் மருந்துகள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறதா இதனை மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது அவசியம், இதையில்லாமல் வலி நிவாரணிகள் பயன்படுத்துவதும் சிறந்த தீர்வாக அமையும்.

ஒரு மனிதன் சாதாரணமாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் யாரும் அதை முறையாக செயல்படுத்துவதில்லை. நாம் நம்முடைய தூங்கும் நேரத்தை சரியாக அமைத்துக் கொண்டாலே உடலில் பல பிரச்சனைகள் நம்மை விட்டு செல்லும். முறையற்ற தூக்கத்திற்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களும் காரணமாக அமைகிறது நாம் தூங்குவதற்கு முன் காபி போன்ற விஷயங்களை அருந்துவதை தவிர்க்கவும்.

Also Read: Jackfruit: ஆரோக்கியம் அதிகமாகும்.. பலாப்பழத்தில் கொட்டிக்கிடக்கும் சத்துகள்!

தனிமை மற்றும் மனச்சோர்வு ஆகியவை நம்முடைய உடல்வலிகளை இன்னும் அதிகரிக்கும். தனிமையை தவிர்த்து குடும்ப உறவுகளுடன் நேரத்தை செலவிடுவது நம்முடைய வழிகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது. நாள்பட்ட வலிகளுக்கு நாம் பிசியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம். வலி உள்ள இடத்தை மசாஜ் செய்வது தசை இறுக்கத்தை சரி செய்து மேம்படுத்த உதவுகிறது.

Latest News